azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The sixth flower dear to God is austerity (tapas). Tapas does not mean forsaking spouse and children, and escaping into the loneliness of the forest. The real austerity is the complete coordination between one's thought, word and deed. The evil person can never achieve this; they behave falsely to their own self. When a person succeeds in this tapas, the words they utter will have such power that whatever they say will be transformed into mantras! The seventh flower is dhyana (meditation). Today, many methods of dhyana exist! Remember, sitting quietly and transferring your emotions and feelings to God is no dhyana. You must earnestly transmute your emotions, desires, and feelings with the help of God into Divine qualities – that is true meditation! Through the help of your meditation, you should not bring God down to your level; instead, you must raise yourself to the level of God! (Divine Discourse, Oct 06, 1981)
WHENEVER AND WHEREVER YOU PUT YOURSELF IN TOUCH WITH GOD,
IT IS THE STATE OF MEDITATION. - BABA
இறைவனுக்குப் பிடித்த ஆறாவது மலர் தவம் (தபஸ்). தவம் என்றால், மனைவி மக்களைத் துறந்து விட்டு, காட்டின் தனிமைக்குத் தப்பி ஓடி விடுவது என்பதல்ல. உண்மையான தவம் என்பது சிந்தனை, சொல் மற்றும் செயலுக்கு இடையில் முழுமையான ஒருங்கிணைப்பே ஆகும்.ஒரு தீய மனிதனால், இதைப் பெறவே முடியாது; அவர்கள் தங்களது சொந்த இயல்புக்கே மாறாகவே நடந்து கொள்கிறார்கள். எப்போது ஒரு மனிதன் இப்படிப் பட்ட தவத்தில் வெற்றி பெறுகிறானோ, அப்போது, அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்றால், அவர்கள் எதைக் கூறினாலும் அது மந்திரங்களாக மாறி விடும்! ஏழாவது மலர் தியானம் ஆகும். இன்று பல விதமான தியானங்கள் இருக்கின்றன! அமைதியாக அமர்ந்து கொண்டு, உங்களது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், இறைவனிடம் ஒப்படைத்து விடுவது தியானமாகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களது உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் உணர்வுகளை இறைவனின் துணை கொண்டு தெய்வீக குணங்களாகப் பண்படுத்த வேண்டும்- அதுவே உண்மையான தியானம்! உங்களது தியானத்தின் மூலம் நீங்கள் இறைவனை உங்கள் அளவிற்குத் தாழ்த்தி விடக் கூடாது; நீங்கள் உங்களையே, இறைவனின் அளவிற்கு உயர்த்திக் கொள்ள வேண்டும்!
எங்கெல்லாம், எப்போதெல்லாம், நீங்கள் உங்களுக்கு இறைவனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ, அதுவே தியான நிலையாகும்- பாபா