azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The fourth flower to be offered to God is kshama - tolerance or fortitude. Kshama is truth, righteousness, knowledge, sacrifice and joy. Without kshama none can be happy even for a single moment! Kshama promotes divine qualities and reveals Divinity within you. You must perform sadhana to earn it and establish yourself in it. Nourish the idea that God is equally present in all, in spite of ridicule from the ignorant and sarcastic criticism from the blind or even praise from admirers. The fifth flower is shanti - inner peace. Shanti does not mean that whatever others may say or however they abuse, one should not react at all. It does not mean that one must be silent as a rock. It involves mastery of all the senses and passions; inner peace must become one's nature. Shanti has detachment as the basic quality. The sea, which likes to gather and possess, lies low; the cloud that likes to renounce and give up is high in the sky. (Divine Discourse, Oct 06, 1981)
REAL SHANTI ENDOWS YOU WITH AN UNRUFFLED MIND AND STEADY VISION. - BABA
இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய நான்காவது மலர் க்ஷமா – சகிப்புத்தன்மை அல்லது பொறுமை. க்ஷமாவே சத்யம், தர்மம், ஞானம், தியாகம் மற்றும் ஆனந்தம். க்ஷமா இல்லாமல் எவரும் ஒரு கண நேரம் கூட சந்தோஷமாக இருக்க முடியாது ! க்ஷமா தெய்வீக குணங்களை ஊக்குவித்து, உங்களுள் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்துகிறது. நீங்கள் அதைப் பெற ஆன்மிக சாதனையை மேற்கொண்டு, அதில் உங்களை நீங்களே நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அறியாதவர்களின் பரிகாசம் மற்றும் குருடர்களின் ஏளனமான விமரிசம் அல்லது ஏன் பாராட்டுபவர்களின் புகழ்ச்சி ஆகியவை இருந்தாலும் கூட. இறைவன் அனைத்தின் உள்ளும் சமமாக இருக்கிறான் என்ற கருத்தைப் பேணிக் காத்திடுங்கள். ஐந்தாவது மலர் சாந்தி- அக அமைதி. சாந்தி என்றால், பிறர் எதைச் சொன்னாலும் அல்லது எப்படித் தூற்றினாலும், ஒருவர் எதிர்த்துச் செயல்படக் கூடாது என்று பொருளல்ல.ஒருவர் பாறையைப் போல மௌனமாக இருக்க வேண்டும் என்றும் பொருள் அல்ல. அனைத்து புலன்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீது ஆளுமை பெறுவதில் தான் அது உள்ளது; அகச்சாந்தி ஒருவரது இயல்பான குணமாக ஆக வேண்டும். சாந்திக்கு, பற்றின்மை அடிப்படை குணமாகும். குவித்து வைத்துக் கொள்ள விரும்பும் கடல் தாழ்ந்த நிலையில் உள்ளது; அனைத்தையும் துறந்து, விட்டு விட விரும்பும் மேகம், வானத்தில் உயர் நிலையில் இருக்கிறது.
உண்மையான சாந்தி, உங்களுக்குக் கலங்காத மனதையும்,
நிலையான கண்ணோட்டத்தையும் அளிக்கிறது- பாபா