azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Ahimsa, the virtue of nonviolence, is the very first virtuous flower that God loves the most. This involves much more than abstention from injuring living beings. One should desist from causing pain to any living being not only by deeds, but even by words and thoughts. One should not entertain any idea of hurting or humiliating another. The second flower God desires is control and mastery of the senses (indriya nigraham).One should not run after sensual pleasure and sensory joy. The third flower that is very dear to Lord is compassion (daya). Compassion towards all living beings and all things is pleasing to the Lord (Sarvabhuta-daya), for ‘All is God’, verily! You must always remember that the scriptures teach us that adoration and respect paid to any god reaches the Supreme (Sarva deva namaskaram Keshavam prati gacchati). It must also be cherished with equal validity, that humiliation caused to any living being reaches the Supreme (Sarva Jeeva thiraskaram Keshavam prathigacchati)! (Divine Discourse, Oct 06, 1981)
PERFORM KARMA BASED ON WISDOM, THE WISDOM THAT ALL IS ONE. LET YOUR EVERY KARMA BE SUFFUSED WITH DEVOTION; THAT IS TO SAY, WITH HUMILITY, LOVE, COMPASSION, AND NON-VIOLENCE! - BABA
நல்லொழுக்க சீலமான அஹிம்ஸையே, இறைவன் மிகவும் விரும்பும் முன் முதல் ஒழுக்க மலராகும்.உயிருள்ள ஜீவராசிகளைக் காயப்படுத்துவதைத் தவிர்த்து விடுவதை விடவே, இது மேலும் அதிக அம்சங்களைக் கொண்டதாகும். எந்த ஜீவராசியையும் செயல்களால் மட்டும் அல்லாது சொற்கள் மற்றும் சிந்தனைகளாலும் கூட ஒருவர் துன்பப்படுத்தக் கூடாது. மற்றொருவரை காயப்படுத்துவது அல்லது அவமானப்படுத்துவது என்ற சிந்தனையைக் கூட ஒருவர் வரவழைத்துக் கொள்ளக் கூடாது. இறைவன் விரும்பும் இரண்டாவது மலர் புலனடக்கம்(இந்திரிய நிக்ரஹம்) ஆகும். ஒருவர், புலனின்பங்கள் மற்றும் புலன்களின் சந்தோஷங்களுக்குப் பின்னால் அலையக் கூடாது. இறைவனுக்கு மிகவும் பிடித்த மூன்றாவது மலர் பரிவு ( தயை ) ஆகும். உண்மையில், ‘’ அனைத்துமே இறைவன் ‘’ என்பதால், அனைத்து ஜீவ ராசிகள் மற்றும் பொருட்கள் மீது காட்டும் பரிவு (ஸர்வபூத தயா) இறைவனை மகிழ்விக்கும்! எந்தக் கடவுள் மீதும் நாம் செலுத்தும் போற்றுதல் மற்றும் மரியாதை, பரம்பொருளையே சென்றடைகிறது (ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதிகச்சதி) என சாஸ்திரங்கள் நமக்கு போதிக்கின்றன என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஜீவராசிக்கும் ஏற்படுத்தும் அவமானமும் அந்தப் பரம்பொருளையே சென்றடைகிறது (ஸர்வ ஜீவ திரஸ்காரம் கேசவம் பிரதிகச்சதி ) என்பதும் கூட அதே அளவு ஏற்புடையதே என மதிக்கப்பட வேண்டும்.
அனைத்தும் ஒன்றே என்ற ஞானத்தின் அடிப்படையில் செயலாற்றுங்கள். உங்களது ஒவ்வொரு செயலும் பக்தியில் தோய்ந்திருக்கட்டும்; அதாவது பணிவு,ப்ரேமை, பரிவு மற்றும் அஹிம்ஸையால் !- பாபா