azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Material wealth brings along with it, not only joy but grief as well. Accumulation of riches and multiplication of wants only lead to alternation between joy and grief. Attachment is the root-cause for both joy and grief; detachment is the saviour. Attachment (Ashakti) is death (maraka); non-attachment (anashakti) is the saviour (tharaka). A millionaire pays income-tax with tears in his eyes; a headmaster joyfully gives up the furniture and laboratory appliances of his school when he is transferred to some other place. Why? Because the headmaster knows that he is only the caretaker, not the owner. He is not attached to these articles; he knows that they belong to the government. So too feel that your family, your house, your fields, your car, and so on are all the Lord's property and that you are only the trustee; be ready to give them up without a murmur at a moment's notice. -Divine Discourse, Aug 19, 1964
WHATEVER HAPPENS TO YOU, TAKE IT AS A LESSON TO HARDEN YOUR CHARACTER, TOUGHEN YOUR NERVES AND HEIGHTEN YOUR VAIRAGYA (DETACHMENT). THAT WILL GIVE PEACE AND JOY. - BABA
பொருட்களாலான செல்வம் தன்னுடன் சந்தோஷத்தை மட்டும் அல்லாது துக்கத்தையும் கூட தன்னுடன் கொண்டு வருகிறது. செல்வத்தைக் குவிப்பதும், ஆசைகளைப் பெருக்கிக் கொள்வதும், சுகமும், துக்கமும் மாறி மாறி வருவதற்கு இட்டுச் செல்கின்றன. பற்றுதலே சுக, துக்கங்களுக்கான மூல காரணம்; பற்றின்மையே காப்பவர். பற்றுதலே (அஷக்தி) மரணம் (மாரக ); பற்றின்மையே (அனாஷக்தி ) காப்பவர் ( தாரக ). ஒரு கோடீஸ்வரர், கண்ணீர் வடித்துக் கொண்டே வருமான வரி கட்டுகிறார்; ஒரு தலைமை ஆசிரியர் வேறு ஒரு இடத்திற்கு பணி மாற்றம் செய்யப் படும் போது,அவரது பள்ளியின் நாற்காலிகள் மற்றும் பரிசோதனை உபகரணங்களை சந்தோஷமாக விட்டு விட்டுச் செல்கிறார். ஏன்? ஏனென்றால், தலைமை ஆசிரியர் தான் ஒரு காவல் பொறுப்பாளரே மட்டுமே அன்றி உடைமையாளர் அல்ல என்பதை அறிவார். அவருக்கு அந்தப் பொருட்களின் மீது பற்றுதல் இல்லை; அவை அனைத்தும் அரசாங்கத்தைச் சேர்ந்தது என்பதை அவர் அறிவார். அதைப் போலவே, உங்களது குடும்பம்,உங்கள் இல்லம்,உங்களது நிலங்கள், உங்களது கார் போன்றவை அனைத்தும் இறைவனது சொத்துக்களே என்பதையும், நீங்கள் ஒரு அறங்காவலரே என்பதையும் உணருங்கள்; ஒரு கண முன் அறிவிப்பில், எந்த முணுமுணுப்பும் இன்றி. அவற்றை விட்டுச் செல்லத் தயாராக இருங்கள்.
உங்களுக்கு எது நடந்தாலும், அதை, உங்களது குணநலனை உறுதியாக்குவதற்கும், உங்களது நரம்புகளை வலுவாக்குவதற்கும், உங்களது வைராக்யத்தை உயர்த்துவதற்கும், ஆன ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு சாந்தி, சந்தோஷங்களைத் தரும் - பாபா