azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Do karma (activity) based on the spiritual wisdom that all is One! Let it be suffused with devotion, humility, love, compassion and nonviolence. If devotion is not filled with spiritual wisdom it will be light as a balloon, which drifts along any gust of wind. Mere wisdom will make your heart dry; devotion makes it soft with sympathy, and karma gives the hands something to do, something that will sanctify your every minute you live. That is why devotion is referred to as upasana which also means ‘dwelling near’, feeling the Presence, and sharing the sweetness of Divinity. The yearning for upasana prompts you to go on pilgrimages, to construct and renovate temples, to consecrate images and offer prescribed worship. All this is karma of a high order; they lead to spiritual wisdom. First, you start with the idea, “I am in the Light.” Then you feel, “The light is in me,” leading to the conviction, “I am the Light.” That is supreme wisdom! (Divine Discourse, Jul 07, 1963)
SEE YOURSELF IN ALL: LOVE ALL AS YOURSELF! - BABA
அனைத்தும் ஒன்றே என்ற ஆன்மீக ஞானத்துடன், கர்மாவை ( செயலை ) ஆற்றுங்கள். அது பக்தி, பணிவு, ப்ரேமை, பரிவு மற்றும் அஹிம்ஸையில் தோய்ந்திருக்கட்டும்.பக்தி ஆன்மீக ஞானத்தால் நிரம்பி இல்லை என்றால், எந்தக் காற்று அடித்தாலும், அதோடு பறந்து போய்விடும் ஒரு பலூனைப் போல லேசாகவே இருக்கும்.வெறும் ஞானம் உங்கள் இதயத்தை வரண்டதாக்கி விடும்; பக்தி அதனைக் கருணையால் மிருதுவாக்கும்; கர்மா நீங்கள் வாழும் ஒவ்வொரு மணித்துளியையும் புனிதமாக்கும் அளவிற்குக் கரங்களுக்கு ஏதாவது பணி அளிக்கும். அதனால் தான் பக்தி, ‘’ உபாஸனா ‘’ எனக் குறிப்பிடப் படுகிறது; அதாவது ‘’அருகில் இருப்பது’’, இறைவனது அருகாமையை உணர்ந்து, அந்த தெய்வீகத்தின் இனிமையைப் பகிர்ந்து கொள்வது என்ற அர்த்தம் கொண்டதாகும். உபாஸனைக்கான ஏக்கம், உங்களை தீர்த்த யாத்திரை செல்வது, கோவில்களைக் கட்டுவது, அவற்றை புனருத்தாரணம் செய்வது, விக்ரஹங்களை ஸ்தாபித்து முறையாக வழிபாடு செய்வது போன்றவற்றிற்குத் தூண்டுகிறது. இவை அனைத்தும் ஒரு உயர்நிலையான கர்மாவாகும்; அவை உங்களை ஆன்மீக ஞானத்திற்கு இட்டுச் செல்லும். முதலில் நீங்கள், ‘’ நான் ஜோதியில் இருக்கிறேன் ‘’ என்ற கருத்தில் ஆரம்பிக்கிறீர்கள். பின்னர், நீங்கள், ‘’ ஜோதி என்னுள் உள்ளது ‘’ என்று உணர்ந்து, அதிலிருந்து, ‘’ நானே ஜோதி ‘’ என்ற நம்பிக்கைக்கு இட்டுச் செல்லப் படுகிறீர்கள். அதுவே தலைசிறந்த ஞானமாகும் !
அனைவரிலும், உங்களையே நீங்கள் காணுங்கள்;
அனைவரையும், உங்களைப் போலவே நேசியுங்கள் - பாபா