azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Once Krishna pretended to suffer from an unbearable headache. With warm clothes wound around His head and red eyes, He rolled restlessly in bed. Queens Rukmini and Satyabhama tried many remedies that proved ineffective. Along with Narada, when they consulted Lord Krishna, He directed to bring the dust of the feet of a true devotee! In a trice, Narada manifested himself in the presence of some celebrated devotees, but they were too humble to offer dust of their feet to be used for their Lord as a drug! Narada returned disappointed. Krishna asked, “Did you ask Gopis?” Narada hurried with disbelief! When the Gopis heard this, without a second thought, they shook the dust off their feet and filled his hands! Even before Narada reached Dwaraka, Krishna’s headache had disappeared! The Lord enacted this five-day drama to teach that self-condemnation is also egoism and when ego goes, you feel neither superior nor inferior, and a devotee must obey the Lord’s command without demur. (Divine Discourse, Jul 07, 1963)
LOVE IS THE KEY TO OPEN THE DOORS LOCKED BY EGOISM AND GREED. - BABA
ஒருமுறை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ,ஒரு தாங்க முடியாத தலைவலியால் துடிப்பதாக நடித்தார்.தலையைச் சுற்றிச் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டும் ,சிவந்த கண்களுடன் , அமைதி இல்லாமல் படுக்கையில் புரண்டார். ராணிகளான ருக்மணியும், சத்யபாமாவும் பலவித மருந்துகளைக் கொடுத்தும் அவை பலனளிக்கவில்லை . நாரதருடன் சேர்ந்து அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை கலந்து ஆலோசித்தபின் , அவர், அவர்களை ஒரு உண்மையான பக்தரின் கால் தூசியைக் கொண்டு வருமாறு பணித்தார்! நொடியில் நாரதமுனிவர் , பல புகழ் வாய்ந்த பக்தர்களின் முன் தோன்றினார்: ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது கால் தூசியை பகவானுக்கு ஒரு மருந்தாக அளிக்கத் தயங்கினார்கள் ! நாரதமுனிவர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர் , " நீ கோபிகைகளைக் கேட்டாயா ? "" என்று வினவினார் . நாரத முனிவர் நம்பிக்கை இன்றி அவர்களிடம் விரைந்தார்! கோபிகைகள் இதைக் கேட்டவுடனேயே , எந்த மாற்று எண்ணமும் இன்றி, தங்களது கால் தூசிகளைத் தட்டி அவரது கைகளில் நிரப்பி விட்டார்கள் ! நாரதமுனிவர், துவாரகையை சென்று அடைவதற்கு முன்பே பகவான் ஸ்ரீகிருஷ்ணரது தலைவலி மறைந்துவிட்டது ! சுய கண்டனம் கூட அஹங்காரமே : அஹங்காரம் நீங்கி விடும் போது , நீங்கள் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ உணரமாட்டீர்கள்: ஒரு பக்தன் தெய்வத்தின் ஆணைக்கு தயக்கமின்றி பணிய வேண்டும் என்பதை போதிப்பதற்காகவே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த ஐந்து நாள் நாடகத்தை நடத்தினார்.
அஹங்காரம் மற்றும் பேராசையால் மூடப்பட்டு இருக்கும்
கதவுகளைத் திறக்கும் சாவி ப்ரேமையே - பாபா