azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
There can be no garland without the string that runs through the flowers. There can be no person without the inner kinship that God ensures for each. He is the Brahmasutra (the Brahman String), invisible but inevitable. When a balloon is blown, it bursts and the air inside it merges with the vast limitless expanse outside. Expansion is the heart of education. Your love must expand and fill your homes, society, and finally, burst these bonds and merge world-over. A drop of water held in the palm evaporates soon; it is too alone. But drop it into the sea and it survives as part of the sea. It assumes the name and taste, the majesty and might of the sea! Cultivate Love; sow the seeds of love in all hearts. Shower Love on the desert sands, let the green shoots, lovely flowers, sweet harvest of nectar of joy, peace and bliss be earned by every being. That is My Wish, My Mission, My Vow. (Divine Discourse, Jul 25, 1975)
PRACTICE THE VOCABULARY OF LOVE – UNLEARN
THE LANGUAGE OF HATE AND CONTEMPT. - BABA
பூக்களுக்கு இடையே ஊடுருவிச் செல்லும் நூல் ஒன்று இல்லாமல் எந்த மாலையும் இருக்க முடியாது.இறைவன் ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யும் உள்ளார்ந்த உறவு இன்றி ஒருவரும் இருக்க முடியாது.இறைவனே கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் தவிர்க்க முடியாத ப்ரம்ம சூத்ரம் ( ப்ரம்ம நூல் ) ஆவான். ஒரு பலூனை ஊதிக் கொண்டே இருந்தால், அது வெடித்து அதனுள் உள்ள காற்று, வெளியில் உள்ள பரந்த அளவற்ற ஆகாய விசாலத்துடன் கலந்து விடுகிறது. விசாலமடைவதே, கல்வியின் இதயமாகும்.உங்களது ப்ரேமை பரந்து விசாலமடைந்து உங்கள் இல்லங்கள், சமுதாயம் ஆகியவற்றில் பரவி, பின்னர் இறுதியில், இந்த பந்தங்களை உடைத்துக் கொண்டு உலகனைத்துடனும் கலந்து விட வேண்டும். அது மிகவும் தனித்து இருப்பதனால்,உள்ளங்கையில் வைத்துக் கொண்ட ஒரு சொட்டு நீர் விரைவில் ஆவியாகி விடுகிறது; ஆனால், அதை கடலில் போட்டு விடுங்கள்; அது கடலின் ஒரு பகுதியாக பிழைத்திருக்கும்.அது கடலின் நாமம், சுவை,மகத்துவம் மற்றும் வலிமையைப் பெற்று விடுகிறது ! ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்; அதன் விதையை அனைத்து இதயங்களிலும் நட்டு விடுங்கள். பாலைவன மணலில் ப்ரேமையைப் பொழியுங்கள், துளிர்த்து வரும் செடிகள், அழகான மலர்கள் மற்றும் சாந்தி, சந்தோஷம் மற்றும் ஆனந்தத்தின் இனிய அறுவடை ஒவ்வொரு ஜீவராசிக்கும் கிடைக்கட்டும். இதுவே எனது விருப்பமும், எனது அவதார நோக்கமும்,எனது ஸங்கல்பமும் ஆகும்.
ப்ரேமையின் பரிபாஷையைக் கடைப்பிடியுங்கள்;த்வேஷம் மற்றும் இகழ்ச்சியின் பாஷையை நினைவிலிருந்து நீக்குங்கள். - பாபா