azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The reconstruction of humanity on moral foundations is today a universal problem. In all countries the emphasis is on standard of life, not on the way of living. Once you turn toward the path of worldly happiness, you will be led on to even greater discontent, competition, pride and jealousy. Just stop for a moment and examine your own experience; whether you are happier when you grow richer and whether you get more peace as and when your wants are satisfied. Then you will bear witness to the truth that an improved standard of living is no guarantee of happiness. Remember, education or the mastery of information and the acquisition of skills is no guarantee of mental equanimity. As a matter of fact, you find the educated everywhere more discontented and more competitive than the uneducated. So the reestablishment of righteousness (dharma), which is the task of the Avatar, is as urgent in other parts of the world as it is in India. (Divine Discourse, Apr 23, 1961)
DESIRE DESTROYS DEVOTION, ANGER DESTROYS WISDOM, GREED DESTROYS WORK
– HENCE GET RID OF THESE THESE BAD QUALITIES IN YOU. - BABA
இன்று மனித குலத்தை நல்லொழுக்கத்தின் அஸ்திவாரங்களில் புனருத்தாரணம் செய்வதே, ஒரு பிரபஞ்சமயமான பிரச்சனையாகும். அனைத்து தேசங்களிலும் வாழ்க்கைத் தரத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறதே அன்றி , வாழும் முறைக்கு அல்ல. ஒரு முறை உலகியலான சந்தோஷங்களின் பாதையில் நீங்கள் திரும்பி விட்டால், நீங்கள் மேலும் அதிகமான அதிருப்தி, போட்டி மனப்பாங்கு, தற்பெருமை மற்றும் பொறாமைக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள். நீங்கள் அதிகம் பணக்காரராக ஆனபோது அதிகம் சந்தோஷப்பட்டீர்களா மேலும் உங்களது தேவைகள் பூர்த்தி ஆனபோது அதிகம் சாந்தியை அடைந்தீர்களா என்று ஒரு கணம் நின்று, உங்களது சொந்த அனுபவத்தை ஆராய்ந்து பாருங்கள். பின்னர், வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றம் மட்டுமே சந்தோஷத்திற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்பதை நீங்களே காண்பீர்கள். கல்வி அல்லது விஷயங்களின் பாண்டித்யம் மற்றும் திறன்களைப் பெறுதல் ஆகியவை சமச்சீரான மனப்பாங்கிற்கான உத்திரவாதமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உண்மையில், படிக்காதவர்களை விட, படித்தவர்கள் தான் எங்கும் அதிக அதிருப்தியுடனும், அதிக போட்டி மனப்பாங்குடனும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே, அவதாரத்தின் பணியான தர்ம புனருத்தாரணம், பாரதத்தைப் போலவே, உலகின் மற்ற பகுதிகளிலும் அவசரமான ஒன்றாகும்.
ஆசை, பக்தியை அழிக்கிறது, கோபம் ஞானத்தை அழிக்கிறது, பேராசை , கர்மாவை அழிக்கிறது – எனவே உங்களுள் உள்ள இந்த கெட்ட குணங்களை விட்டொழித்து விடுங்கள் - பாபா