azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Although God dwells in every person, this fact remains latent like oil in the seed of a mustard. To manifest God within you, you must go through certain trials and ordeals. Love for God should grow as a result of experiences of adversity. Just as gold improves in brilliance the more it is heated in the crucible, your devotion has to go through a constant purificatory process. Today all thoughts and actions are polluted in one way or another. Your thoughts, vision and words are contaminated. Young people should aim at becoming an ideal example to the world. For this purpose they should cultivate good company, that is, the company of persons filled with Divine Love. Unlike in previous ages, people today pretend to be what they are not. They have to get rid of their animal instincts and progress from the human to the Divine. (Divine Discourse, Aug 21, 1992)
TRUE DEVOTION LIES IN ACCEPTING BOTH PLEASURE AND PAIN
WITH EQUAL-MINDEDNESS. - BABA
இறைவன் ஒவ்வொரு மனிதனுள்ளும் உறைகிறான் என்றாலும் கூட, இந்த உண்மை, எள்ளின் உள் எண்ணெயைப் போல, மறைந்து உள்ளது. உங்களுள் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்த, நீங்கள் சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்தே ஆக வேண்டும். இன்னல்களின் விளைவாக, இறைவன் பால் கொள்ளும் ப்ரேமை வளர வேண்டும். மேலும், மேலும் உலையில் இட்டு உருக்குவதனால் ஒளி விட்டு ஜொலிக்கும் தங்கத்தைப் போல, உங்களது பக்தியும் ஒரு இடையறாத பரிசுத்தப்படுத்தப் படும் முறைக்கு உள்ளாக வேண்டும். இன்று, அனைத்து சிந்தனைகள் மற்றும் செயல்களும் ஏதோ ஒரு விதத்தில் மாசடைந்தே இருக்கின்றன.உங்களது சிந்தனைகள்,கண்ணோட்டம் மற்றும் வார்த்தைகள் களங்கமடைந்துள்ளன.இளம் வயதினர், உலகிற்கே ஒரு இலட்சிய உதாரணமாக ஆவதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இதற்காக, அவர்கள் நல்லவர்களின், அதாவது தெய்வீக ப்ரேமையால் நிரம்பியவர்களின் நட்பு வட்டத்தை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். முந்தைய யுகங்களைப் போல அல்லாது,இன்று மக்கள் தாங்கள் எவ்வாறு இல்லையோ ,அவ்வாறு இருப்பதைப் போல பாசாங்கு செய்கிறார்கள். அவர்கள் தங்களது மிருக உணர்வுகளை விட்டொழித்து, மனித நிலையிலிருந்து, தெய்வீக நிலைக்கு முன்னேற வேண்டும்.
சுகத்தையும், துக்கத்தையும், சமச்சீரான மனப்பாங்குடன்
ஏற்றுக் கொள்வதில் தான் உண்மையான பக்தி இருக்கிறது. - பாபா