azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 02 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 02 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Every child’s life is greatly influenced by parents’ qualities. The loving care of mother Jijabai made Shivaji a great warrior. Gandhi became a Mahatma because of his pious mother Putlibai. Putlibai observed a strict vow wherein she would wait for the cooing of the cuckoo before having food. One day, she waited for a very long time for the cuckoo’s call without taking food. The young Gandhi could not bear to see his mother fasting for such a long time. Hence, he went out of the house and imitated a cuckoo’s coo. Then he came inside and said, "Mother, please take your food now, as we heard the cuckoo." Unable to contain her grief that her son lied, she slapped Gandhi and cried, "What sin did I commit that a liar should be born to me!" Gandhi immediately repented and prayed for her forgiveness. He pledged that he would never utter a lie, and lived for truth until the end. - Divine Discourse, Nov 23, 2003.
YOUR VERY SPEECH SHOULD BE SOFT. NOT MERELY SOFT AND SWEET
BUT MUST BE TRUTHFUL ALSO. - BABA
ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும், பெற்றோர்களின் குணங்களால் மிகுந்த தாக்கத்திற்கு உள்ளாகின்றன.அன்னை ஜீஜாபாயின் அன்பான பரிவு, சிவாஜியை ஒரு மாவீரனாக ஆக்கியது.காந்தி, அவரது பக்தி நிறைந்த தாயான புத்லிபாயினால், ஒரு மஹாத்மா ஆனார். புத்லிபாய், உணவு அருந்துவதற்கு குயில் கூவுவதற்காகக் காத்திருப்பது என்ற ஒரு கண்டிப்பான விரதத்தை அனுசரித்து வந்தார். ஒரு நாள், அவர், உணவு அருந்தாமல், வெகு நேரம் குயில் கூவுவதற்காகக் காத்திருந்தார். இளம் வயதினரான காந்திக்கு தன் தாய் இவ்வளவு நேரம் பட்டினியாக இருப்பதைக் காணச் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அவர் வீட்டிலிருந்து வெளியே சென்று, ஒரு குயிலைப் போலக் கூவினார். பின்னர் அவர் உள்ளே வந்து, ‘’ அம்மா! நாங்கள் குயில் கூவுவதைக் கேட்டு விட்டோம், தயவு செய்து நீங்கள் உணவு அருந்துங்கள் ‘’ என்று கூறினார். தனது மகன் பொய் சொன்னான் என்ற துக்கத்தைத் தாங்க முடியாத அவர் காந்தியை அறைந்து, ‘’ ஒரு பொய் பேசுபவன் எனக்குப் பிறக்க நான் என்ன பாவம் செய்தேன்?’’ என்று அழுதாராம். காந்தி உடனே பச்சாதாபப் பட்டு, தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அவர், தான் ஒரு போதும் பொய் பேசமாட்டேன் என ஒரு உறுதி மொழி எடுத்துக் கொண்டு, கடைசி வரை சத்தியத்திற்காகவே வாழ்ந்தார்.
உங்களது பேச்சு இதமானதாக இருக்க வேண்டும்.வெறும் இதமாகவும், இனிமையானதாகவும் மட்டுமல்ல,சத்தியமானதாகவும் கூட இருக்க வேண்டும். - பாபா