azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The Dasara festival honours the victory of the devas (God) over the asuras (demons) - the forces of righteousness over the forces of evil. They won because Parashakthi (the dynamic aspect of Divinity), the Power that has elaborated God into all this variety and beauty, came to give them succour and fight on their behalf. Holy company such as this helps to arouse the desire to know oneself, to know the true nature of the world around us and to know how to discover and experience the unity of both, expressed as the vedic dictum, ‘That-thou-art’. It is through the subtle influence of the company into which he was inducted that Narada, the son of a maid, was transformed into the foremost practitioner and exponent of Bhakti-marga (path of devotion); that Valmiki, a highway robber, was transmuted into a great sage and foremost amongst poets; and that many sinners were shown the path of repentance and redemption. - Divine Discourse, Sep 26, 1965
THERE IS NO NOBLER QUALITY IN THE WORLD THAN LOVE. IT IS WISDOM;
IT IS RIGHTEOUSNESS. IT IS WEALTH IT IS TRUTH. - BABA
தசரா பண்டிகை, அசுரர்களின் மீது தேவர்கள் , அதாவது ,தர்மத்தின் சக்திகள், தீய சக்திகள் மீது பெற்ற வெற்றியை கொண்டாடுகிறது. இறைவனை, இந்த அனைத்து விதங்கள் மற்றும் சௌந்தர்யத்தில் விரிவாக எடுத்துக் காட்டும் சக்தியான பராசக்தி ( தெய்வீகத்தின் சக்தி அம்சம் ), அவர்களுக்கு உதவி செய்ய வந்து, அவர்களின் சார்பாக போரிட்டதால், அவர்கள் வெற்றி பெற்றார்கள். தன்னையும்,நம்மைச் சுற்றி உள்ள உலகின் தன்மையையும், வேத மஹா வாக்யமான , ‘’ தத்வம் அஸி ‘’ யில் விவரிக்கப்பட்ட இந்த இரண்டின் ஒற்றுமையை எவ்வாறு கண்டறிந்து அனுபவிப்பது என்பதையும், தெரிந்து கொள்ளும் ஆவலைத் தட்டி எழுப்புவதில், இப்படிப் பட்ட புனிதமானவர்களின் நட்பு வட்டம் உதவி புரிகிறது. ஒரு வேலைக்காரியின் மகனான நாரதர், அவர் அறிமுகப் படுத்தப் பட்ட இப்படிப் பட்ட நட்பு வட்டத்தின் நுண்ணிய தாக்கத்தினால், பக்தி மார்க்கத்தின் தலைசிறந்த பயிற்சியாளராகவும், பிரதிநிதியாகவும் மாறினார்; ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, ஒரு தலைசிறந்த முனிவராகவும், கவிகளுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாகவும் உருமாறினார் ; மேலும் பல பாவிகளுக்கு பச்சாதாபம் மற்றும் விமோசனத்தின் பாதையில் செல்லும் வாய்ப்பும் கிட்டியது.
அன்பை விட சீரிய குணம் இந்த உலகில் எதுவும் இல்லை. அதுவே ஞானம். அதுவே தர்மம். அதுவே செல்வம், அதுவே சத்தியம் - பாபா