azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Hesitation in praying to God is purely superficial. During examinations, every student prays to the Almighty. When calamities happen, or loss is sustained, or members of the family are struck by disease and are in mortal danger, then everyone rushes to pray to God. Why then yield to false pride and refuse to acknowledge God at good times? This is sheer hypocrisy! Another characteristic of the educated is their pride. They walk around, wearing the crown of conceit. Pride is the wall that divides the Divine from the demon, Truth from untruth. This obstacle must be removed for Divinity to manifest. Many students and youth develop this pest called pride because they have physical charm, educational achievements and monetary resources. They must be very vigilant to eradicate this trait at the earliest. If Divinity is absent, everything is devilry. All of you must have faith in God, call out to Him and pray fearlessly. That will drive away the vileness that envelops you. (Divine Discourse, Aug 31, 1981)
PRAYER ALONE MAKES LIFE HAPPY, HARMONIOUS AND WORTH LIVING IN THIS UNIVERSE. - BABA
இறைவனைப் பிரார்த்திக்கத் தயங்குவது என்பது வெறும் மேம்போக்குத் தனமானதே. பரீட்சைகளின் போது, ஒவ்வொரு மாணவனும், இறைவனைப் பிரார்த்திக்கிறான். விபத்துக்கள் நேரும்போது அல்லது நஷ்டம் ஏற்படும்போது அல்லது, குடும்பத்து அங்கத்தினர் வியாதியால் பீடிக்கப் படும்போது, ஒவ்வொருவரும், இறைவனைப் பிரார்த்திக்க ஓடுகிறார்கள். பின்னர், நல்ல காலங்களில், பொய்யான தற்பெருமைக்கு இடம் கொடுத்து, இறைவனை ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்க வேண்டும்? இது வெறும் பாசாங்குத் தனமே ! படித்தவர்களின் மற்றும் ஒரு குணம் தற்பெருமையே. அவர்கள் வன்மத்தின் கிரீடத்தை அணிந்து கொண்டு அலைந்து திரிகிறார்கள். தற்பெருமை என்பது, சாத்தானிடமிருந்து இறைவனையும், அசத்தியத்திலிருந்து சத்தியத்தையும் பிரிக்கும் சுவர் போன்றதாகும். தெய்வீகம் பரிமளிக்க, இந்தத் தடையை விலக்கியே ஆக வேண்டும். அவர்களிடம் உடல் அழகு,கல்வி சாதனைகள் மற்றும் பண வசதிகள் ஆகியவை இருப்பதால், பல மாணவர்களும், இளைஞர்களும் இந்த தற்பெருமை எனும் விஷப் பூச்சியை வளர்த்துக் கொள்கிறார்கள். இந்த மனப்பாங்கை, ஆரம்பத்திலேயே அழித்து விடுவதில் அவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். தெய்வீகம் இல்லை என்றால், அனைத்தும் கொடூரமானதே. நீங்கள் அனைவரும் இறைவன் பால் நம்பிக்கை வைத்து, அவனை அறைகூவி, அச்சமின்றி அவனை பிரார்த்திக்க வேண்டும். அது உங்களைச் சூழ்ந்து கொள்ளும் கீழ்த்தரமானவற்றை விரட்டி விடும்.
இந்த பிரபஞ்சத்தில், பிரார்த்தனை மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், இசைவானதாகவும், வாழ உகந்ததாகவும் ஆக்குகிறது - பாபா