azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Your success in Sadhana depends on self-control and sense-control. Even for the successful execution of your mundane daily chores don’t you find these controls very beneficial? Most living beings developed discrimination out of necessity, for their survival. But in humans, it has become a highly developed skill. One has to use this skill to separate the chaff from the grain and decide on the constructive path of truth and righteousness. Without cleansing the mind of its evil thoughts and low desires, how can one achieve good results from meditation or worship? Food cooked in unclean vessels is not fit for consumption. Similarly, the primary need for progress in spiritual practice is a pure mind which is free from evil thoughts and feelings. Work is purified with an attitude of worship. Dedicate all your activity to God. Then, it will not be warped and worsened by the ego. Each one of you must continue to be very disciplined and that will keep you on the straight path. (Divine Discourse, Apr 12, 1981)
SANCTIFICATION OF FIVE SENSES IS THE WAY TO GOD. - BABA
உங்களது ஆன்மீக சாதனையின் வெற்றி, உங்களது சுயக் கட்டுப்பாடு மற்றும் புலனடக்கத்தைப் பொறுத்ததே. உங்களது உலகியலான அன்றாட வேலைகளை வெற்றிகரமாக ஆற்றுவதற்குக் கூட இந்தக் கட்டுப்பாடுகள் மிகவும் பயனுள்ளவையாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா? பெரும்பாலான ஜீவராசிகள் ,அவர்களது உயிர் பிழைப்பதற்கான தேவையின் காரணமாக, பகுத்தறிவை வளரத்துக் கொள்கின்றன. ஆனால், மனிதர்களில், இது மிகவும் முன்னேறியுள்ள திறனாக ஆகி விட்டது. இந்தத் திறனை, ஒருவர், பதரைத் தானியத்திலிருந்துப் பிரித்துப் பார்ப்பதைப் போலப் பயன்படுத்தி, சத்யம் மற்றும் தர்மத்தின் பயனுள்ள பாதையை ஏற்க முடிவு செய்ய வேண்டும். மனதிலிருந்து தீய சிந்தனைகளையும், கீழ்த்தரமான ஆசைகளையும் நீக்காமல், ஒருவர், தியானம் மற்றும் இறை வழிபாட்டிலிருந்து, நல்ல பயன்களைப் பெறுவதை எப்படி எதிர் பார்க்க முடியும்? அழுக்கான பாத்திரத்தில் சமைக்கப் பட்ட சமையல் உண்பதற்கு ஏற்றதல்ல. அதைப் போலவே, தீய சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் இல்லாத ஒரு பரிசுத்தமான மனமே, ஆன்மீக சாதனையில் முன்னேற்றத்தை அடைவதற்கான முதன் முதல் தேவையாகும். ஆராதனை உணர்வோடு ஆற்றப்படும் செயல், பரிசுத்தமாகிறது. உங்களது அனைத்து செயல்களையும், இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். பின்னர், அது அஹங்காரத்தால், தவறானதாகவும், மோசமானதாகவும் ஆகாது. நீங்கள் ஒவ்வொருவரும் மிகுந்த கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்; அதுவே, உங்களை நேரான பாதையில் செல்ல வைக்கும்.
ஐம்புலன்களைப் புனிதப்படுத்துவதே,
ஆண்டவனை அடைவதற்கான வழியாகும்- பாபா