azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Tyaga (sacrifice or renunciation) is not going to the forest, leaving behind your spouse, children and property. What needs to be sacrificed is the hankering for results, the fruits of one’s actions. That is true sacrifice. You must renounce indiscriminate desires. Then only will your heart become pure. God desires only a pure, loving and sacred heart. God does not desire or need anything from you! It is only you who have desires. When you have noble desires, God will be happy. It is only then your family, society and country will experience peace and happiness. First and foremost, peace should reign in your own home. Then, that peace will be radiated to the society. When societies become good, the country will prosper. If peace is to be established in the country, the individual should experience peace in the first instance. World peace is possible only when peace is established at the individual level. If an individual is not at peace, how can there be peace in the world? (Divine Discourse, Sep 5, 2006)
TO GET ANGRY IS BUT THE EFFORT OF A MOMENT; BUT TO LIVE IN PEACE, TO BECOME UNAFFECTED BY THE UPS AND DOWNS OF LIFE, IS THE RESULT OF YEARS OF TRAINING IN VEDANTA. - BABA
தியாகம் என்றால், உங்களது மனைவி, மக்கள் மற்றும் சொத்துக்களை விட்டு விட்டு காட்டுக்குச் செல்வது என்பதல்ல. தியாகம் செய்ய வேண்டியது, ஒருவரது செயல்களின் பலன்கள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றிற்காக ஏங்குவதையே. அதுவே, உண்மையான தியாகமாகும். நீங்கள் கண் மூடித் தனமான ஆசைகளை விட்டு விட வேண்டும். அதன் பின்னரே உங்கள் இதயம் பரிசுத்தமானதாகும். இறைவன் விரும்புவதெல்லாம் ஒரு பரிசுத்தமான, பரிவான, புனிதமான இதயத்தையே. இறைவன் உங்களிடமிருந்து விரும்புவது அல்லது வேண்டுவது என்று எதுவும் இல்லை! ஆசைகள் கொண்டவர் நீங்கள் மட்டுமே. உங்களுக்குச் சீரிய ஆசைகள் இருக்குமானால், இறைவன் மகிழ்ச்சி அடைவான். அதன் பின்னரே, உங்கள் குடும்பம், சமுதாயம் மற்றும் தேசம், சாந்தி, சந்தோஷங்களை அனுபவிக்கும். முதன் முதலில், உங்களது சொந்த இல்லத்தில் சாந்தி நிலவ வேண்டும். பின்னர், அந்த சாந்தி, சமுதாயத்திற்குப் பரவும். சமுதாயங்கள் நல்லவையாக ஆகும்போது, தேசம் மேன்மை அடையும். தேசத்தில் சாந்தியை நிறுவ வேண்டும் என்றால், முதலில், தனி மனிதன் சாந்தியை அனுபவிக்க வேண்டும். தனி மனித அளவில் சாந்தி நிறுவப்பட்டால் மட்டுமே, உலக அமைதி சாத்தியமாகும். தனி மனிதன் சாந்தியுடன் இல்லை என்றால், உலகத்தில் அமைதி எப்படி இருக்க முடியும் ?
கோபப் படுவது என்பது ஒரு கண நேர முயற்சியே; ஆனால் சாந்தியுடன் வாழ்ந்து, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் படாமல் இருப்பது என்பது, பல வருடங்களில் செய்த வேதாந்தப் பயிற்சியின் விளைவாகும் - பாபா