azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The kind of life you choose to lead and the aspirations which you have in your mind can be achieved if you are in the company of good people. You must cultivate friendship with good people and follow their example in your daily routine. Good people can be recognised by their gentle thoughts, loving words and noble deeds. Youth is the appropriate age for you to lead such a life and put yourself in the company of elders. During this age, you will be able to develop good ideas and good conduct; you should make a firm determination to do so. At this important stage of your life, dedicate yourself to the service of your country and to the service of your parents. On the contrary, if you spend your time in bad company and wander about the streets like stray dogs and whistle like foxes, you will be wasting your life. Time wasted is life wasted. (Summer Showers in Brindavan, 1973, Ch 5)
THE WORLD'S PROSPERITY OR OTHERWISE IS BASED UPON THE CHARACTER OF ITS YOUTH. - BABA
நீங்கள் நல்லோரின் நட்பு வட்டத்தில் இருப்பீர்களேயானால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையையும், உங்கள் மனதில் நீங்கள் கொண்டிருக்கும் அபிலாஷைகளையும் சாதிக்க முடியும். நீங்கள் நல்லோரின் நட்பை வளர்த்துக் கொண்டு, அவர்களது உதாரணத்தை உங்களது அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். நல்ல மனிதர்களை, அவர்களது இதமான சிந்தனைகள், நேசமான வார்த்தைகள் மற்றும் சீலமான செயல்களின் மூலம் இனம் கண்டு கொள்ள முடியும். இப்படிப் பட்ட ஒரு வாழ்க்கையை நடத்துவதற்கும், உங்களை பெரியவர்களின் நட்பு வட்டத்தில் வைத்துக் கொள்வதற்கும், இளமையே உங்களுக்குப் பொருத்தமான பருவமாகும். இந்தப் பருவத்தில், நீங்கள் நற்சிந்தனைகள் மற்றும் நன்னடத்தையை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்; அவ்வாறு செய்வதற்கான ஒரு திட ஸங்கல்பத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது வாழ்வின் முக்கியமான இந்த பருவத்தில், உங்களது தேசம் மற்றும் உங்களது பெற்றோரின் சேவையில் உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். மாறாக, நீங்கள் உங்களது நேரத்தை தீயோரின் நட்பு வட்டத்தில் செலவழித்து, தெரு நாய்களைப் போல வீதிகளில் சுற்றித் திரிந்து கொண்டும், நரிகளைப் போல ஊளையிட்டுக் கொண்டும் இருந்தீர்களேயானால்,நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீணடித்து விடுவீர்கள். காலத்தை வீணடிப்பது, வாழ்க்கையே வீணடிப்பது போலாகும்.
உலகின் வளமோ அல்லது வறுமையோ, அதன் இளைஞர்களின் குணநலனையே ஆதாரமாகக் கொண்டு இருக்கும்- பாபா