azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Our scriptures teach that you attain merit by serving others and commit sin by hurting them. This must be practiced everywhere. For example, understanding and adjustment between each other are very essential for the smooth functioning of a family. When there is proper understanding between wife and husband, the wife will not mind even when the husband returns home very late from office. In fact, she will be anxiously waiting for him thinking that he may be busy at work or is stuck in a traffic jam. But if there is no proper understanding between the two, even a five minute delay, will create a big fight! Adjusting will become easy only when there is proper understanding. When a teacher goes on leave, another teacher can engage his class. Such understanding and adjustment among teachers will help students very much. This must be practiced by all, be it students or teachers or members of a family or communities. (Divine Discourse, Sep 29, 2000)
HELP EVER, HURT NEVER - BABA
நமது சாஸ்திரங்கள், நீங்கள் பிறருக்குச் சேவை செய்வதால் புண்ணியத்தைப் பெறுகிறீர்கள் என்றும், அவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் பாவம் செய்கிறீர்கள் என்றும் போதிக்கின்றன. இதை எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக ஒவ்வொருவருக்கும் இடையே, புரிந்து கொள்ளுதலும், ஒத்துப்போதலும் , ஒரு குடும்பம் இனமாகச் செயல்படுவதற்கு மிகவும் அத்தியாவசியமாகும். கணவன், மனைவிக்கு இடையில் சரியான புரிதல் இருந்தால், கணவன் வெகு நேரம் தாமதமாக, அலுவலகத்தில் இருந்து வந்தால் கூட, மனைவி அதைப் பொருட்படுத்த மாட்டாள். உண்மையில், அவள், கணவர் ஒருவேளை வேலையில் மும்முரமாக இருக்கிறாரோ அல்லது ஒரு போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு இருக்கிறாரோ எனக் கவலையுடன் அவருக்காகக் காத்திருப்பாள். ஆனால், அந்த இருவருக்கும் இடையில் சரியான புரிதல் இல்லை என்றால், ஒரு ஐந்து நிமிட தாமதம் கூட ஒரு பெரிய சண்டையை உருவாக்கி விடும் ! சரியான புரிதல் இருக்கும் போது மட்டுமே, ஒத்துப் போதல் என்பது எளிதாகி விடும். ஒரு ஆசிரியர், விடுப்பில் சென்றிருந்தால், மற்றொரு ஆசிரியர் அவரது வகுப்பை நடத்த முடியும். ஆசிரியர்களுக்கு இடையே இருக்கும் இப்படிப் பட்ட புரிதலும், ஒத்துப்போதலும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதை மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ அல்லது ஒரு குடும்பத்தின் அல்லது சமூகங்களின் அங்கத்தினர்களோ என யாராக இருந்தாலும், அனைவரும் கடைப் பிடிக்க வேண்டும்.
எப்போதும் உதவுங்கள்; ஒருபோதும் தீங்கு இழைக்காதீர்கள்- பாபா