azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 06 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 06 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Each and every one of you must have faith in God and self-confidence. If there is no faith you can achieve nothing. Where there is confidence there is Love. Where there is Love, there is Peace. Where there is Peace, there is Truth. Where there is Truth, there is Bliss. Where there is Bliss, there is God. In fact, without faith you can have no faith even in your mother. There should be confidence. Once you have confidence that a person is your mother, you love her. Confidence leads to love. Love takes you to peace. Peace produces truth and as soon as truth manifests, you achieve bliss. This Bliss is the very God-head itself. So, confidence is a necessary characteristic. It is this loss of confidence that is the cause of lack of spirituality in the world. (Divine Discourse, Sep 29, 2000)
FAITH IN GOD IS THE BEDROCK ON WHICH ONE’S LIFE SHOULD BE BUILT. - BABA
உங்கள் ஒவ்வொருவருக்கும் இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லை என்றால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது. எங்கு தன்னம்பிக்கை இருக்கிறதோ, அங்கு ப்ரேமை இருக்கும். எங்கு ப்ரேமை இருக்கிறதோ, அங்கு சாந்தி இருக்கும். எங்கு சாந்தி இருக்கிறதோ, அங்கு சத்யம் இருக்கும். எங்கு சத்யம் இருக்கிறதோ, அங்கு ஆனந்தம் இருக்கும். எங்கு ஆனந்தம் இருக்கிறதோ, அங்கு இறைவன் இருப்பான். உண்மையில், தன்னம்பிக்கை இல்லை என்றால், உங்களுக்கு, உங்கள் தாய் மீது கூட நம்பிக்கை இருக்காது. தன்னம்பிக்கை இருக்க வேண்டும். ஒருவர் உங்கள் தாய் தான் என்ற நம்பிக்கை இருந்தால், நீங்கள் அவளை நேசிப்பீர்கள். நம்பிக்கை ப்ரேமைக்கு இட்டுச் செல்கிறது. ப்ரேமை, சாந்திக்கு உங்களை இட்டுச் செல்கிறது. சாந்தி , சத்யத்தை ஏற்படுத்துகிறது; சத்யம் வெளிப்பட்ட உடனேயே, நீங்கள் ,ஆனந்தத்தை அடைகிறீர்கள். இந்த ஆனந்தமே இறைவன் தான். எனவே, நம்பிக்கையே ஒரு அத்தியாவசியமான குணநலனாகும். இந்த நம்பிக்கை இன்மையே, உலகில் ,ஆன்மீகக் குறைவுக்கான காரணமாகும்.
இறை நம்பிக்கையே, ஒருவர் தனது வாழ்வை
நிர்மாணிக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும் - பாபா