azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
A teacher is like a guidepost. If the guidepost itself is loose, how can it point to the right direction? So, a teacher should have a steady mind. Only then can one guide the students along the right path. The teacher should impart the human values of satya, dharma, shanthi, prema and ahimsa. Many are confused as to what is the foremost value among these five. Love is of paramount importance. Every teacher must teach their students to love and respect their parents, relatives and all fellow-beings. Teachers must have a pure heart and virtues like adherence to truth, good conduct, duty, devotion and discipline, so that they can impart the same to the students. He or she alone, who imparts these virtues to the students, is a teacher in the true sense. The whole world will prosper, when students tread along the right path. Hence it is essential on the part of a teacher, whom the students are bound to emulate, to cultivate virtues. (Divine Discourse, Sep 29, 2000)
WHATEVER BE THE TROUBLE, HOWEVER GREAT BE THE SORROW,
PERSIST AND WIN OVER IT BY RECALLING THE LORD’S NAME. - BABA
ஒரு ஆசிரியர், ஒரு வழிகாட்டிக் கம்பம் போன்றவர். வழிகாட்டிக் கம்பமே ஆட்டங்கண்டு இருந்தால், அது எவ்வாறு சரியான திசையைக் காட்ட முடியும்? எனவே, ஒரு ஆசிரியருக்கு ஒரு உறுதியான மனம் இருத்தல் வேண்டும். அதன் பிறகே, ஒருவர் மாணவர்களை சரியான வழியில் நடத்திச் செல்ல முடியும். ஆசிரியர், மனிதப் பண்புகளான சத்தியம், தர்மம், சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்ஸை ஆகியவற்றைப் புகட்ட வேண்டும்.இந்த ஐந்திலும் முன் முதலான பண்பு எது என்பதில், பலருக்குக் குழப்பமாக இருக்கிறது. ப்ரேமையே முன் முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அனைத்து சக மனிதர்களையும் நேசித்து மதிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவற்றை ஆசிரியர்களுக்கு ஒரு பரிசுத்தமான இதயமும், சத்தியம், நன்னடத்தை, கடமை, பக்தி மற்றும் கட்டுப்பாடு போன்ற சீலங்களைப் பற்றி ஒழுகுதல் ஆகியவை இருத்தல் வேண்டும் ; அப்போது தான் அவற்றை, அவர் மாணவர்களுக்கும் புகட்ட முடியும். இந்த சீலங்களை மாணவர்களுக்குப் புகட்டும் அவன் அல்லது அவள் மட்டும் தான் ஒரு உண்மையான ஆசிரியர் ஆவார். மாணவர்கள் நேரான பாதையைப் பின்பற்றி நடக்கும் போதே, இந்த உலகனைத்தும் வளம் பெறும். எனவே, மாணவர்கள் கண்டிப்பாக அவரைப் பின்பற்றுவார்கள் ஆதலால், ஒரு ஆசிரியர், இந்த சீலங்களை அபிவிருத்தி செய்து கொள்வது அத்தியாவசியமே.
துன்பம் எதுவானாலும், துயரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இடையறாத இறைநாமஸ்மரணையின் மூலம் வெற்றி பெறுங்கள்- பாபா