azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 23 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 23 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The name ‘Krishna’ has three separate meanings: (1) Karsh is one root from which the name is derived. It means, ‘that which attracts’; Krishna attracts hearts to Himself, by His sportive pastimes, miraculous victories over the forces of evil, His charming conversation, His wisdom and His personal beauty. (2) The word is also related to the root Krish, to cultivate, as a field for growing crops. The meaning derived therefrom is - He who removes the weeds from the heart of man, and sows the seeds of faith, courage and joy. (3) It is related to the root, Krish, which also means something above and beyond the three attributes and the three eras, and na means, Sat-chit-ananda (Truth-Consciousness-Bliss). The leelas (divine plays) and mahimas (miracle powers) of Krishna through which He attracts the love of mankind, cultivates the harvest of joy in the hearts of His devotees and makes them aware of His being Sat-chit-ananda are described in the Bhagavata. (Divine Discourse, Aug 13, 1971.)
PRAYER ALONE MAKES LIFE HAPPY, HARMONIOUS AND WORTH LIVING IN THIS UNIVERSE. - BABA
‘’ கிருஷ்ணா’ என்ற பெயருக்கு மூன்று தனித்தனி அர்த்தங்கள் உள்ளன: (1) கர்ஷ் என்ற எந்த மூல வார்த்தையிலிருந்து அது தோன்றியதோ அது. அதன் பொருள் ‘’ ஈர்ப்பது எதுவோ அது’’; கிருஷ்ணர், தனது வீலைகள்,தீய சக்திகளின் மீது அவரது வியக்கத் தக்க வெற்றிகள்,அவரது கனிவான வார்த்தைகள், அவரது அறிவு மற்றும் அவரது தனிப்பட்ட அழகு ஆகியவற்றால், இதயங்களை தன்பால் ஈர்க்கிறார். (2) இந்த வார்த்தை, அதன் மூல வார்த்தையான க்ருஷ், அதாவது, பயிர்களை விளைவிக்கும் ஒரு நிலம், என்பதோடும் சம்பந்தப் பட்டது. இதிலிருந்து பெரும் பொருள்- அவர் மனிதனின் இதயம் எனும் நிலத்திலிருந்து களைகளை நீக்கி, நம்பிக்கை, தைரியம் மற்றும் சந்தோஷத்தின் விதைகளை நடுகிறார் என்பதாகும். (3) மூன்று குணங்கள் மற்றும் முக்காலங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்ற பொருளும் கொண்ட க்ருஷ் என்ற மூல வார்த்தையோடும், சத்-சித்-ஆனந்தா என்ற பொருள் கொண்ட ‘’நா ‘’வோடும், அது, சம்பந்தப் பட்டதாகும். மனித குலத்தின் ப்ரேமையை ஈர்த்து, அவரது பக்தர்களின் இதயங்களில் ஆனந்தத்தைப் பயிரிட்டு அறுவடை செய்து, அவர் தான் சத்-சித்-ஆனந்தம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்ற அவரது லீலைகள் மற்றும் மஹிமைகள், ஸ்ரீமத் பாகவதத்தில் , விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரபஞ்சத்தில், பிரார்த்தனை மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், இசைவானதாகவும், வாழ உகந்ததாகவும் ஆக்குகிறது - பாபா