azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Your determination to acquire ananda and shanti (bliss and peace) should not flicker like the flame of a lamp placed on a gusty windowsill. You must learn to acquire them from scriptures or from the wise who have won them. Then adhere to the path, however sharp the criticism, and no matter who condemns it callously and cynically. Cynical laughter shouldn’t harm an aspirant. Can a storm shake the Himalayan ranges? Let not your faith in your goal quake before troubles, trials, toils, travail, distress or despair. They are but passing clouds, casting temporary shadows, hiding the glory of the sun or the moon for a little while. Never get distracted by doubt or despondency. Build the mansion of your life on the firm pillars of dharma, artha, kama, moksha (righteousness, prosperity, desire and liberation) - the goals of human effort (Purusharthas) laid down by ancient sages, each pillar bound strong and safe with every other. Never allow the pillars to slant or tumble, as many individuals, communities and nations are doing now! (Divine Discourse, Mar 23, 1966)
WHATEVER BE THE TROUBLE, HOWEVER GREAT BE THE SORROW, PERSIST AND
WIN OVER IT BY RECALLING THE LORD’S NAME. - BABA
ஆனந்தம் மற்றும் சாந்தியைப் பெற வேண்டும் என்ற உங்களது தீர்மானம், வேகமாகக் காற்று வீசும் ஒரு ஜன்னலில் வைக்கப் பட்ட ஒரு தீபம் போல, ஊசலாடக் கூடாது. அவற்றை எவ்வாறு அடைய வேண்டும் என்பதை, நீங்கள் முனிவர்கள் தொகுத்துள்ள சாஸ்திரங்களிலிருந்தோ அல்லது அவற்றை வென்ற ஆன்றோர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், அதற்கு எதிரான விமரிசனம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அல்லது இரக்கமன்றி அதைக் கண்டிப்பவர் எவராக இருந்தாலும், நீங்கள் அந்தப் பாதையைப் பற்றி ஒழுக வேண்டும். எந்த எகத்தாளச் சிரிப்பும், ஆன்மீக சாதகரைப் பாதிக்கக் கூடாது . ஒரு புயல், இமய மலையை உலுக்க முடியுமா? துன்பம் அல்லது துயரம், கஷ்டம் அல்லது நஷ்டம், வேதனை அல்லது விரக்தி ஆகியவற்றை எதிர்கொள்ளும் போது, உங்களது குறிக்கோள் மற்றும் அதற்கான பாதை மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, நிலைகுலையாமல் இருக்கட்டும் ! அவை எல்லாம், தாற்காலிகமான நிழல்கள் மூலம், ஒரு சிறு நேரத்திற்கு சூரியன் அல்லது சந்திரனின் பேரொளியை மறைக்கும், கலைந்து விடும் மேகங்கள் போன்றவையே அன்றி வேறில்லை. சந்தேகம் அல்லது மனச்சோர்வினால், ஒருபோதும், உங்கள் கவனத்தைச் சிதற விடாதீர்கள். மனித முயற்சியின் குறிக்கோள்கள் என பண்டைய முனிவர்களால் வகுத்துக் கொடுக்கப் பட்டவையும், ஒவ்வொன்றும் , மற்ற ஒவ்வொன்றாலும் வலிமை மற்றும் பாதுகாப்பால் பிணைக்கப் பட்டவையுமான, தர்மம், அர்த்தம், காமம், மற்றும் மோக்ஷம் என்ற நான்கு ஸ்திரமான தூண்களின் மீது, உங்களது வாழ்க்கை எனும் மாளிகையை உருவாக்குங்கள். பல மனிதர்கள், சமூகங்கள் மற்றும் தேசங்கள் இப்போது செய்து கொண்டிருப்பதைப் போல, ஒரு போதும், இந்தத் தூண்களை, சாயவோ அல்லது சரியவோ அனுமதித்து விடாதீர்கள் !
உங்களது துன்பங்கள் எதுவானாலும்,உங்களது துயரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இடையறாத இறைநாமஸ்மரணையின் மூலம் வெற்றி பெறுங்கள்- பாபா