azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The tongue may utter the Name of the Lord, your ears may be open when the glory of the Lord is recited, your hands may scatter flowers on the image of God, but does your tongue know or relish its taste? Does the ear yearn? Does the hand hanker for the Lord? The result of your spiritual practices can be experienced only when your heart is aware of the Supreme and when your mind is thrilled when the glory of God is recollected. Otherwise it is like the spoon which dips into sour and sweet with equal alacrity and insensitivity. It does not refuse or relish any taste! Read Vedanta or sacred texts or scriptures earnestly and practice them, then it will become part of your daily living, conduct and character. One’s claim to be a devotee of the Lord, a votary of the Highest, can be admitted only if your passions and emotions are pure, noble and your character virtuous. (Divine Discourse, Mar 23, 1966)
LOVE FOR GOD SHOULD BE FREE FROM ANY DESIRE OR FAVOUR. - BABA
நாக்கு, இறைவனது திருநாமத்தை உச்சரிக்கலாம்;உங்களது காதுகள், இறைவனது மகிமை பாராயணம் செய்யப் படும்போது திறந்திருக்கலாம்; உங்கள் கரங்கள் இறைவனது விக்ரஹத்தின் மீது மலர்களைத் தூவலாம்; ஆனால் உங்களது நாக்கு அதனது சுவையை அறியவோ அல்லது அனுபவிக்கவோ செய்கிறதா? காது அதற்காக ஏங்குகிறதா? கரம், இறைவனை விரும்பி நாடுகிறதா? உங்களது இதயம் பரமாத்வை உணர்ந்தும், உங்கள் மனம் இறைவனது மகிமையை நினைவு கூறும் போது புல்லரிக்கவும், செய்தால் மட்டுமே உங்களது ஆன்மீக சாதனைகளின் பலன்களை நீங்கள் அனுபவிக்க முடியும். இல்லை என்றால், அது, கசப்பு மற்றும் இனிப்பில் ஒரே விதமான ஆர்வம் மற்றும் உணர்வற்ற தன்மையோடு மூழ்கும் கரண்டியைப் போன்றதாகி விடும். அது எந்த சுவையையும் மறுப்பதோ அல்லது சுவைப்பதோ இல்லை! வேதாந்தம் அல்லது புனித நூல்கள் அல்லது சாஸ்திரங்களை ஆத்மார்த்தமாகப் படித்து அவற்றை பயிற்சி செய்யுங்கள்; பின்னர் அதுவே உங்களது அன்றாட வாழ்க்கை, நடத்தை மற்றும் குணநலனின் ஒரு அங்கமாகி விடும். உங்களது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் பரிசுத்தமானதாகவும், சீரியவையாகவும், உங்களது குணநலன் சீலமானதாகவும் இருந்தால் மட்டுமே, தான் இறைவனின் ஒரு பக்தன், ஒரு தலைசிறந்த தொண்டன் என்று ஒருவர் உரிமை கொண்டாடுவதை ஏற்றுக் கொள்ள முடியும்.
இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையில் எந்த விதமான விருப்பமோ அல்லது வேண்டுதலோ இருக்கக் கூடாது- பாபா