azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

What is sadhana (spiritual exercise)? Service is true sadhana. Serve society. Treat everyone as your brother and sister. Only through selfless service will your life be redeemed. Consider service unto others as a service to God. Unfortunately, today people take to service expecting something in return. People have become money-minded. Excessive wealth makes one egotistic. Ego leads to bad qualities. Excessive desires make one suffer. As the desires increase, misery also increases. “Asamtruptho dwijo nashtaha (a discontented man suffers both ways).” People are not happy with what they have and feel unhappy over what they have not got. Be content with what you have. Experience bliss and share it with others. If you have devotion, God Himself will confer bliss. (Divine Discourse, Sep 30, 1998)
CONTENTMENT IS THE MOST PRECIOUS TREASURE. - BABA
ஆன்மீக சாதனை என்றால் என்ன? சேவையே உண்மையான ஆன்மீக சாதனை. அனைவரையும் சகோதர, சகோதரிகளாகக் கருதுங்கள். தன்னலமற்ற சேவையின் மூலமே, உங்களது ஜன்மம் சாபல்யமடையும். பிறருக்கு ஆற்றும் சேவையை, இறைவனுக்கே ஆற்றும் சேவையாகக் கருதுங்கள்.துரதிருஷ்ட வசமாக இன்று, மக்கள், ஏதாவது ஒன்றை எதிர்பார்த்தே சேவையில் ஈடுபடுகிறார்கள். மனிதர்கள் பணத்தாசை கொண்டவர்களாக ஆகி விட்டார்கள். தேவைக்கு அதிகமான செல்வம், ஒருவரை அஹங்காரம் கொண்டவர்களாக ஆக்கி விடுகிறது. அஹங்காரம் தீய குணங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, துன்பமும் அதிகரிக்கிறது. ‘’ அஸந்துஷ்டோ த்வஜோ நஷ்டஹ ‘’( ஒரு திருப்தி அற்ற மனிதன் இரண்டு விதத்திலும் துன்பமடைகிறான் ). மனிதர்கள் தங்களிடம் இருப்பதை வைத்து சந்தோஷப்படுவதும் இல்லை; அவர்களுக்குக் கிடைக்காததைப் பற்றி துக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். உங்களிடம் இருப்பதை வைத்து திருப்தி அடையுங்கள். ஆனந்தத்தை அனுபவித்து, அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பக்தி இருக்குமானால், இறைவன் தானே வந்து ஆனந்தம் அளிப்பான்.
திருப்தியே மிக விலையுயர்ந்த பொக்கிஷமாகும் - பாபா