azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
When Lord Rama’s idol was taken away from Thyagaraja, he was grief-stricken. He even questioned the divinity of Rama and cried out, “Don’t you have the power to solve my problems, or do I lack devotion? Definitely I have devotion, it is only you who lack power.” He continued in this vein extolling his devotion and in the process, he became egoistic. When he sat in meditation, wisdom dawned on him. He realised his folly in doubting Rama’s divinity. He reflected, “Without the grace of Lord Rama, could a monkey cross the ocean? If Rama lacked power, would Lakshmana worship Him or for that matter Lakshmi, the goddess of wealth, serve Him and the extremely intelligent Bharata offer his salutations? O Rama! Certainly Your power is immense. It is my ignorance and meanness that I challenged Your divinity.” He sought Lord Rama’s pardon and surrendered himself unto Him. When you purify your heart and surrender to God completely, God instantly manifests! (Divine Discourse, Dec 25, 1998)
TRUE DEVOTION LIES IN ACCEPTING BOTH PLEASURE AND PAIN WITH EQUAL-MINDEDNESS. - BABA
பகவான் ஸ்ரீராமரின் விக்ரஹம் அவரிடமிருந்து எடுத்து செல்லப் பட்ட போது, தியாகராஜர் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவர், ஸ்ரீ ராமரின் தெய்வீகத்தையே சந்தேகித்து,’’ எனது துன்பத்தைத் தீர்க்க வல்ல சக்தி உனக்கு இல்லையா அல்லது எனக்கு பக்தி இல்லையா? கண்டிப்பாக எனக்கு பக்தி இருக்கிறது; உனக்குத் தான் சக்தி இல்லை’’ என்று அழுது புலம்பினார். இதே பாணியில், அவர் தனது பக்தியைப் புகழ்ந்து கொண்டே சென்றதால், அவர் கர்வம் அடைந்தார். அவர் தியானத்தில் அமர்ந்த போது, ஞானம் அவரில் உதயமாயிற்று. ஸ்ரீராமரின் தெய்வீகத்தை சந்தேகித்ததில், தனது தவறை உணர்ந்தார். அவர், ‘’ பகவான் ஸ்ரீராமரின் அருளின்றி, ஒரு குரங்கு கடலைத் தாண்ட முடியுமா? ஸ்ரீராமரிடம் சக்தி இல்லை என்றால், லக்ஷ்மணன் அவரை சேவிப்பானா அல்லது செல்வத்தின் தேவியான மஹாலக்ஷ்மி அவருக்கு சேவை செய்வாரா அல்லது அதி புத்திசாலியான பரதன் அவரை நமஸ்கரிப்பாரா? ஓ ராமா! கண்டிப்பாக உனது சக்தி மகத்தானதே. எனது அறியாமையும், அற்பத்தனமுமே உனது தெய்வீகத்திற்கு சவால் விடச் செய்தது.’’ என எண்ணி உருகினாராம். அவர் ஸ்ரீராமரின் மன்னிப்பை நாடி அவரிடம் சரணாகதி அடைந்தார். உங்கள் இதயத்தைப் பரிசுத்தப் படுத்தி, இறைவனிடம் முழுமையாக சரணடையும் போது, இறைவன் அத்தருணமே ப்ரத்யக்ஷம் ஆகி விடுகிறான் !
சுகத்தையும், துக்கத்தையும், சமச்சீரான மனப்பாங்குடன்
ஏற்றுக் கொள்வதில் தான் உண்மையான பக்தி இருக்கிறது. - பாபா