azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

There are many obstacles along the path of devotion. Difficulties are meant for cleansing the heart and rendering it clean and pure. Some people accuse, criticise and scorn or condemn God when they are going through difficulties. Each one has to face the consequences of their own actions. God remains unaffected. God is pure, unsullied and sacred. Let people say anything, be cool and calm. Do not enter into unnecessary arguments with anyone. Arguments breeds only enmity. Always speak softly and sweetly with a smiling face. That will silence the critics. Smile is the best answer to criticism. When Paul went on accusing Jesus, He lovingly went up to him and gave a pleasing smile. The sweetness in the nectarous smile of Jesus transformed the poisonous heart of Paul. Hence, be always cheerful, even in times of adversities. Always put up a smiling face, never walk around with a ‘castor-oil face’. Happiness lies only in union with God. (Divine Discourse, Dec 25, 1998)
SERVE ALL AND BE NOTHING. - BABA
பக்தி மார்க்கத்தில் பல தடைகள் இருக்கும். துன்பங்கள், இதயத்தைத் துப்புறவாக்கி, அதைத் தூய்மையாகவும்,பரிசுத்தமாகவும் ஆக்குவதற்காகவே ஏற்பட்டவை. சில மனிதர்கள்,அவர்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகும் போது, இறைவனைக் குற்றம் சாட்டி, விமரிசித்து, தூற்றவோ அல்லது கண்டனம் செய்யவோ முற்படுகிறார்கள். ஒவ்வொருவரும், அவர்களது செயல்களின் விளைவுகளை எதிர் கொண்டே ஆக வேண்டும். இறைவன் எந்த பாதிப்பும் இன்றி இருப்பவன். இறைவன், பரிசுத்தமானவன், களங்கமற்றவன் மேலும் புனிதமானவன். மக்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்; நிதானமாகவும், அமைதியாகவும் இருங்கள். எவருடனும், அனாவசியமான வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள்.வாக்கு வாதங்கள் , விரோதத்தைத் தான் உண்டாக்குகின்றன. எப்போதும்,ஒரு புன்னகை கொண்ட முகத்தோடு, இதமாகவும், இனிமையாகவும் பேசுங்கள். அது விமர்சிப்பவர்களின் வாயை அடைத்து விடும். புன்னகையே, விமர்சனத்திற்கான மிகச் சிறந்த பதிலாகும். பால், ஏசு கிருஸ்துவை குற்றம் சாட்டிக் கொண்டே இருந்த போது, அவர், அன்புடன் அவன் அருகில் சென்று, ஒரு இனிமையான புன்னகையைத் தந்தார்.அந்த அமிர்தமயமான புன்னகையில் இருந்த இனிமை, பாலின் விஷமயமான இதயத்தைத் திருத்தி விட்டது. எனவே, எப்போதும், துன்பங்களிலும் கூட, உற்சாகமாக இருங்கள். எப்போதும் புன்னகை பூத்த முகத்தோடு இருங்கள்; ஒரு போதும் ‘’ விளக்கெண்ணெய் மூஞ்சியோடு ‘’ இருக்காதீர்கள். இறைவனோடு இரண்டறக் கலப்பதில் தான் ஆனந்தம் இருக்கிறது.
யாவர்க்கும் சேவை ஆற்றி, யாதொன்றும் அற்றிருங்கள். - பாபா