azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
A great painter once offered to do a fresco on the palace wall; with him came another, who declared that he would paint on the wall opposite whatever painting the great artist drew, even if curtains hid it from his view and the subject of the fresco was maintained a secret! Both were commissioned to the tasks they offered! The second painter finished his work at the very moment the first one completed! The prince arrived in the hall, where a thick curtain partitioned off the two artists. He admired the fresco very much and ordered the curtain to be removed, and lo, on the wall facing the fresco, there was an exact duplicate of that laborious picture! Exact - for the painter polished the wall, making it a fine big mirror! Make your hearts clean, pure and smooth, so that the glory of the Lord might be reflected therein and the Lord might see His own image thereon! (Shivaratri Discourse, March 1963)
TO EXPERIENCE THE PROXIMITY OF THE DIVINE THE EASIEST PATH IS
REMEMBERING CONSTANTLY THE NAME OF THE LORD. - BABA
ஒரு முறை, ஒரு தலை சிறந்த ஓவியர், அரண்மனைச் சுவரில், ஒரு சுவரோவியம் வரைய முன் வந்தார் ; அவரைத் தொடர்ந்து இன்னொரு ஓவியர் வந்து, திரைகள் அதை மறைத்தாலும், வரையப்படும் விஷயம் இரகசியமாக இருந்தாலும் கூட,அந்த தலை சிறந்த ஓவியர் என்ன ஓவியம் வரைகிறாரோ, அதை அப்படியே, அதனது எதிர் சுவரில், தன்னால் வரைய முடியும் என்று அறிவித்தார்! இருவரும் தத்தம் பணியைத் துவக்குமாறு உத்தரவிடப்பட்டார்கள்! இரண்டாவது மனிதர், தனது பணியை, முதலாமவர் முடித்த அதே தருணத்தில், முடித்து விட்டார். இரண்டு ஓவியர்களுக்கு இடையே ஒரு தடித்த திரை இடப்பட்டிருந்த அந்த அறைக்கு, இளவரசர் வந்தார். அந்த சுவரோவியத்தைப் பார்த்து, மிகவும் பாராட்டினார்.பின்னர், அவர் அந்தத் திரையை விலக்குமாறு கட்டளை இட்டார்; என்ன ஆச்சரியம், அந்த சுவரோவியத்தின் எதிரில் இருந்த சுவரில், முதல் மனிதர் மிகுந்த முயற்சியுடன் தீட்டிய அந்த ஓவியத்தின், அதே மாதிரியான நகல் இருந்தது ! துல்லியமான அதே ஓவியம் – ஏனென்றால், அந்த இரண்டாவது ஓவியர், அந்தச் சுவரை மெருகேற்றி, அதை ஒரு மிகச் சிறந்த பெரிய கண்ணாடியாக மாற்றி இருந்தார் ! அதைப் போலவே, நீங்களும், இறைவனது மஹிமை அவற்றில் பிரதிபலிப்பதற்கும், அவன் தனது சொந்த பிம்பத்தையே அவற்றில் காணும் அளவிற்கும், உங்கள் இதயங்களை, தெளிவானதாகவும், பரிசுத்தமாகவும், சீரானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள் !
இடையறாது நினைவு கூறும், இறைநாமஸ்ரணையே , இறைவனது அருகாமையை அனுபவிப்பதற்கான மிகவும் எளிதான வழியாகும் - பாபா