azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 06 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 06 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Silence is the only language of the realised. Practice moderation in speech. That will help you in many ways. It will develop unconditional love (prema), for most misunderstandings and factions arise out of carelessly spoken words. When the foot slips, the wound can be healed, but when the tongue slips, the wound it causes in the heart of another will fester for life. The tongue is liable to four big errors: uttering falsehood, scandalising, finding fault with others, and excessive articulation. These have to be avoided if there has to be peace (shanti) for the individual as well as for society. The bond of universal brotherhood will be tightened if people speak less and speak sweet. Hence, silence was prescribed as a vow for spiritual aspirants by the spiritual texts. You are all spiritual aspirants at various stages of the road, so this discipline is valuable for you also. (Divine Discourse, Jul 22, 1958)
TRUE DEVOTION LIES IN ACCEPTING BOTH PLEASURE AND
PAIN WITH EQUAL-MINDEDNESS. - BABA
தன்னை உணர்ந்தவனின் ஒரே மொழி மௌனமே. மிதமாகப் பேசுங்கள். அது உங்களுக்குப் பல வழிகளில் உதவும்.அது ப்ரேமையை வளர்க்கும் ; ஏனெனில் பல கருத்து வேறுபாடுகளும், பிரிவுகளும், கவனக் குறைவாகப் பேசப்பட்ட வார்த்தைகளினாலேயே எழுகின்றன.கால் வழுக்கினால், அந்தக் காயம் ஆறிவிடும்; ஆனால் நாக்கு தவறினால், அது மற்றவரிடம் ஏற்படுத்தும் காயம் ஆயுள் உள்ளவரை நீடிக்கும்.நாக்கு நான்கு விதமான தவறுகளைச் செய்கிறது –பொய் பேசுவது,வம்பு பேசுவது,பிறரிடம் குறை காண்பது மற்றும் அளவுக்கு மீறி அலட்டுவது.தனி மனிதன் மற்றும் சமுதாயத்தில் சாந்தி நிலவ வேண்டும் என்றால், இந்த நான்கையும் தவிர்க்க வேண்டும். மனிதர்கள் குறைவாகவும், இனிமையாகவும் பேசினால், பிரபஞ்சமயமான சகோதரத்துவ இணைப்பு இறுக்கமடையும். எனவே தான் ஆன்மீக நூல்கள், மௌனத்தை ஆன்மீக சாதகர்களுக்கு ஒரு விரதமாக அறிவுறுத்தியுள்ளன.நீங்கள் அனைவரும் ஆன்மீகப் பாதையின் பல நிலைகளில் இருக்கும் ஆன்மீக சாதகர்களே; எனவே இந்தக் கட்டுப்பாடு உங்களுக்கும் மிக மதிப்பு வாய்ந்த ஒன்றாகும்.
சுகத்தையும், துக்கத்தையும், சமச்சீரான மனப்பாங்குடன்
ஏற்றுக் கொள்வதில் தான் உண்மையான பக்தி இருக்கிறது. - பாபா