azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The ideal of service must inspire those in authority, those who possess riches, those endowed with skills, intelligence, leisure and health. Put an end to laziness, bury your clamorous ego, and bury the greed for power and pelf, then you become qualified to serve! Be worthy of this gift of grace to be a volunteer (Sevadal); maintain its high ideals. This opportunity is sheer grace; it’s not a consequence of some claim. It does not bind you; it gives you distinction and duty! If you have it with you, and yet, you withdraw from service or hesitate to render it, you are on the wrong track. People come to the Divine to get rid of sin and accumulate spiritual merit; if you dishonour the badge, you are retaining sins and perhaps accumulating a lot more! Remember, with each act of love and service, you are nearing the Lord; with each act of hate and grab, you are moving farther away. (Divine Discourse, Oct 16, 1974.)
WHOEVER LOVES AND SERVES ALL, HIM THE LORD LOVES AND HONOURS. - BABA
சேவை ஆற்றவேண்டும் என்ற இலட்சியம், அதிகாரத்தில் உள்ளவர்கள், தனவந்தர்கள், ஆற்றல், புத்தி, ஓய்வு நேரம் மற்றும் ஆரோக்யம் கொண்டவர்கள் ஆகியோருக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். சோம்பேறித்தனத்தை விடுத்து, ஆர்ப்பரிக்கின்ற அஹங்காரம், அதிகாரம் மற்றும் அநியாயமாகப் பணம் சேர்ப்பதில் உள்ள பேராசை ஆகியவற்றிற்குச் சமாதி கட்டி விடுங்கள்; பின்னர், நீங்கள் சேவை ஆற்றுவதற்குத் தகுதி படைத்தவர்களாக ஆகி விடுவீர்கள்! சேவாதளத் தொண்டர் என்ற இந்த இறை அருள் பரிசிற்கு உகந்தவர்களாக இருங்கள்; அதன் உன்னத இலட்சியங்களைக் கடைப் பிடியுங்கள். இந்த வாய்ப்பு இறை அருளே; இது ஏதோ ஒரு உரிமையின் விளைவாகப் பெறப்பட்டதல்ல. அது உங்களை பந்தத்தில் ஆழ்த்தாது; அது உங்களுக்கு தனித்தன்மையையும், கடமையையும் அளிக்கிறது ! அது உங்களிடம் இருந்தாலும் கூட, நீங்கள் சேவையிலிருந்து விலகியோ அல்லது அதை ஆற்றத் தயங்கினாலோ, நீங்கள் தவறான பாதையில் இருக்கிறீர்கள் என்றே பொருள். மனிதர்கள், இறைவனிடம் பாவங்களை நீக்கி, ஆன்மீகப் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்வதற்காக வருகிறார்கள்; நீங்கள் பேட்ஜை அவமதித்தால், பாவங்களைத் தக்கவைத்துக் கொள்வதோடு, ஒருவேளை அவற்றை மேலும் அதிகமாக சேர்த்துக் கொள்வீர்கள் ! ப்ரேமை மற்றும் சேவையின் ஒவ்வொரு செயலின் மூலம், நீங்கள் இறைவனை நெருங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் த்வேஷம் மற்றும் அபகரிப்பின் ஒவ்வொரு செயலின் மூலம், நீங்கள் இறைவனிடமிருந்து வெகு தூரம் விலகிச் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
எவர் ஒருவர் அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை புரிகிறாரோ, அவரை, இறைவனும் நேசித்து கௌரவிக்கிறான் - பாபா