azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Presently devotion is only ‘deep ocean’, where people are submerged in the ocean of worldly life. People talk about compassion, but are concerned only with ‘fashion’. They mouth the word ‘co-operation’, but indulge only in ‘operation’. Presently, devotion is becoming a pompous show. To secure the grace of the Divine, it is not necessary to seek knowledge, wealth, power or position. Purity of mind alone is enough. Every cell of one's body will be filled with the Divine when God is worshipped with pure and single-minded devotion. To the self-sacrificing devotee, God will be Omnipresent. True knowledge comes when one is confronted with an extreme moral crisis. This was the situation Arjuna faced when he was placed between the two opposing armies. Parikshit faced a similar crisis when he learnt he had only one week to live. During such crisis one thinks of God and seeks Divine help. The Lord is ever ready to answer the prayers of true devotees. (Divine Discourse, Dec 31, 1983)
DESIRE DESTROYS DEVOTION, ANGER DESTROYS WISDOM, GREED DESTROYS WORK–
HENCE SACRIFICE THESE BAD QUALITIES MUST BE SACRIFICIED. - BABA
தற்காலத்தில், பக்தி ( devotion ) என்பது உலக வாழ்க்கை எனும் ஆழ்கடலில் (deep ocean ) மக்கள் மூழ்கிக் கிடப்பதாக மட்டுமே இருக்கிறது. மக்கள், கருணையைப் (compassion) பற்றிப் பேசுகிறார்கள்,ஆனால், நவீன ஆடை, அணிகலங்களைப் ( fashion) பற்றித் தான் கவலைப் படுகிறார்கள். அவர்கள் வாய், கூட்டுறவு ( cooperation ) என்று சொல்கிறது ஆனால் அவர்கள் துன்பம் இழைப்பதில் (operation) மட்டுமே ஈடுபடுகிறார்கள். இன்று பக்தி என்பது ஒரு படாடோபமாகவே ஆகி விட்டது. இறைவனது அருளைப் பெறுவதற்கு, அறிவு, செல்வம், அதிகாரம் அல்லது பதவி ஆகியவற்றை நாடத் தேவையில்லை. மனப்பரிசுத்தம் மட்டும் இருந்தாலே போதும்.இறைவனை பரிசுத்தமான மற்றும் ஒருமித்த மனக்குவிப்பான பக்தியோடு வழிபடும்போது, ஒருவரின் உடலின் ஒவ்வொரு செல்லும் தெய்வீகத்தால் நிரம்பி விடும். ஆத்ம தியாகம் செய்யும் ஒவ்வொரு பக்தனுக்கும் இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். மிகவும் தீவிரமான தர்ம சங்கடத்தை ஒருவர் எதிர் கொள்ளும் போது தான், உண்மையான ஞானம் வருகிறது . இரண்டு எதிரும் புதிருமான சேனைகளின் நடுவே, அவன் நிற்கும் போது தான் , அர்ஜூனன் இத்தகைய சந்தர்ப்பத்தை எதிர் கொள்ள நேர்ந்தது. பரீக்ஷித், தான் இன்னும் ஒரு வாரம் தான் வாழப் போகிறோம் என்று தெரிந்து போது தான் இதே மாதிரியான ஒரு நெருக்கடியை எதிர் கொள்ள நேர்ந்தது. இப்படிப் பட்ட நெருக்கடியின் போது தான் ஒருவர் இறைவனைப் பற்றி எண்ணி, அவரது உதவியை நாடுகிறார். இறைவன், உண்மையான பக்தர்களின் பிரார்த்தனைக்குச் செவி மடுக்க எப்போதும் காத்திருக்கிறான்.
ஆசை, பக்தியை அழிக்கிறது, கோபம் ஞானத்தை அழிக்கிறது, பேராசை , கர்மாவை அழிக்கிறது – எனவே இந்த கெட்ட குணங்களை விட்டு விடுங்கள் - பாபா