azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 23 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 23 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

In order to make a child understand that the word 'chair' represents a piece of furniture, you have to draw the picture of a chair and write the letters underneath. When once the child has learnt to identify the kshara (the temporary form, the chair) with the Akshara (the formless eternal — word), the picture is eliminated; the word remains. The word, hence forward, represents the thing, the concrete material visible thing. If no chair existed, the word chair could not have emerged. The word God emerged to indicate an entity that was experienced. A 'nothing', 'non-existing being' needs no name. The name is evidence of the thing. The word God is evidence of the Divine Phenomenon. From the Form to the Formless, from the Formless to the Form - both processes are possible and progressive. Your Personal God is an expression, a symbol, and a representation of the Impersonal God. The Impersonal does personate and assume a form and attributes. This is the very Nature of the Divine. (Divine Discourse, Aug 02, 1986)
GOD COMES IN HUMAN FORM TO FACILITATE PEOPLE HAVE THE PROXIMITY OF THE DIVINE, SO THAT HE CAN TRANSFORM THEM AND GIVE HAPPINESS. - BABA
“நாற்காலி”என்பது ஒரு மரச்சாமான் என்று ஒரு குழந்தைக்குப் புரிய வைப்பதற்கு, நீங்கள் ஒரு நாற்காலியின் படத்தை வரைந்து, அதற்குக் கீழ் அந்த வார்த்தைகளை எழுத வேண்டும். ஒரு முறை, குழந்தை, க்ஷராவை (தாற்காலிகமான ரூபமான நாற்காலி), அக்க்ஷராவாகப் (உருவமற்ற நிரந்தரமான நாமம்) புரிந்து கொண்டு விட்டால், இந்த ரூபம் மறைந்து விடுகிறது; நாமம் மட்டுமே நிலைத்து விடுகிறது.அதன் பிறகு, அந்த நாமம் , கண்களுக்குப் புலப்படக் கூடிய ஸ்தூலப் பொருளை குறிப்பதாக ஆகி விடுகிறது. நாற்காலி என்று ஒன்று இல்லை என்றால்,நாற்காலி என்ற நாமம் வெளிப்பட்டு இருக்க முடியாது.இறைவன் என்ற நாமமும், அனுபவிக்கப் பட்ட ஒன்றைக் குறிப்பதற்குத் தான் வெளிப்பட்டதாகும். ஒரு ‘’இல்லை’’, ‘’ இல்லாத ஒன்று ‘’ என்பதற்கு எந்த நாமமும் தேவையில்லை. இறைவன் என்ற நாமம் தெய்வீக நிகழ்விற்கு அத்தாட்சியாகும். ரூபத்திலிருந்து அரூபத்திற்கும், அரூபத்திலிருந்து, ரூபத்திற்கும்- இந்த இரண்டு முறைகளுமே சாத்தியமானதும், தொடர்ந்து நிகழ்வதும் ஆகும். ரூபத்துடன் கூடிய உங்களது இறைவன் அரூபமான இறைவனின் ஒரு வெளிப்பாடே, ஒரு சின்னமே, ஒரு அறிகுறியே. அரூபமான இறைவன், ஒரு ரூபம் மற்றும் குணங்களை ஏற்று, மனித்தன்மையுடன் வருகிறான்.இது தெய்வீகத்தின் இயல்பே.
மக்களை சீர்திருத்தி, அவர்களுக்கு ஆனந்தம் அளிப்பதற்காக, இறைவன் மனித உருவில் வந்து, அவர்கள் இறைவனது அருகாமையைப் பெற வழி வகுக்கிறான்- பாபா