azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Transform your heart by making it pure and sacred. Purity is the true characteristic of a human being. This purity should be manifested in everything you do: in your thoughts, in what you see or say, and in all that you do. It is only when you display such purity that you can become embodiments of the Divine Self (Atma). Then the distinction between the Divine and the mundane disappears. Everything is Divinised. The difference between the object and the subject will also go. Everything then becomes the whole (poornam). The realisation of that wholeness is the real Guru Poornima, not the offer of pada puja (ritual homage to the feet of Guru) and obtaining a mantra from the Guru. Resolve today to lead an exemplary life, to turn your thoughts to God, to strive for the purification of your heart and to seek Self-realisation in this very birth! (Divine Discourse, Jul 13, 1984)
ALL THAT YOU DO WITH PURITY OF HEART WILL FIND FULFILMENT. - BABA
உங்களது இதயத்தை பரிசுத்தமாகவும்,புனிதமாகவும் ஆக்குவதன் மூலம், அதை சீர்திருத்துங்கள்.பரிசுத்தமே ஒரு மனிதனின் உண்மையான குணநலனாகும். இந்த பரிசுத்தம், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் வெளிப்பட வேண்டும்; உங்களது சிந்தனைகளில், நீங்கள் காண்பவற்றில் அல்லது சொல்பவற்றில் மற்றும் நீங்கள் ஆற்றும் அனைத்திலும்.இப்படிப் பட்ட பரிசுத்தத்தை நீங்கள் காட்டினால் மட்டுமே, நீங்கள் திவ்ய ஆத்மாவின் ஸ்வரூபங்களாக ஆக முடியும். பின்னர், தெய்வீகமானவை, உலகியலானவை என்ற இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மறைந்து விடும். அனைத்தும் தெய்வீகமானதாக ஆகி விடும். ஆற்றுபவர் மற்றும் ஆற்றப் படுவது என்பதற்கு இடையே உள்ள வேறுபாடும் சென்று விடும். அனைத்தும் பின்னர் பரிபூரணமானதாக ஆகி விடுகிறது. அந்த பூரணத்தை உணருவதே உண்மையான குரு பூர்ணிமா ஆகுமே அன்றி, குருவிற்கு பாத பூஜை செய்து அவரிடமிருந்து ஒரு மந்திர உபதேசம் பெறுவது அல்ல. ஒரு தலை சிறந்த வாழ்க்கை நடத்துவது, உங்கள் இதயத்தின் பரிசுத்தத்திற்காகப் பாடுபடுவது, உங்கள் சிந்தனைகளை இறைவனை நோக்கித் திருப்புவது, இந்தப் பிறவியிலேயே ஆத்ம சாக்ஷாத்காரத்தைப் பெற விழைவது என்று இன்றே சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் !
பரிசுத்தமான இதயத்துடன் நீங்கள் செய்யும் அனைத்தும், பரிபூரணத்துவத்தை அடையும்- பாபா