azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

(1) Silence is the first step in sadhana. It promotes self-control; lessens chances of anger, hate, malice, greed, pride and makes other steps easy. Besides, you can hear His footsteps, only when silence reigns in your mind. (2) Cleanliness: It’s the doorway to Godliness. Inner and outer cleanliness are essential to install God in your heart. (3) Service: It saves you from the agony you get when another suffers; broadens your vision, widens your awareness, and deepens your compassion. All waves are on the same sea and merge in the same sea. Seva anchors this knowledge. (4) Pure Love: Never calculate the reaction, result or reward. Love calls; love responds. Love is God, live in Love. (5) Hatelessness: No being must be looked down upon as secondary, inferior, unimportant, or expendable. Each has its allotted role in the drama designed by the Almighty. Never insult or injure any being; for, God lives in every being and your slight becomes a sacrilege! (Divine Discourse, Jul 19, 1970)
SILENCE IS THE SPEECH OF THE SPIRITUAL SEEKER. - BABA
(1) மௌனமே, ஆன்மீக சாதனையின் முதல் படியாகும். அது சுயக் கட்டுப்பாட்டை வளர்க்கிறது; கோபம், த்வேஷம், வன்மம், பேராசை, தற்பெருமை ஆகியவற்றிற்கான வாய்ப்புகளைக் குறைத்து, மற்ற படிகளை எளிதாக்குகிறது. மேலும், உங்கள் மனதில் அமைதி குடி கொண்டிருந்தால் தான் இறைவனது காலடி ஓசைகளை நீங்கள் கேட்க முடியும். (2) தூய்மை: இதுவே இறைத்தன்மைக்கான வாயிலாகும். அக மற்றும் புறத்தூய்மை, உங்கள் இதயத்தில் இறைவனைப் பிரதிஷ்டை செய்வதற்கு அத்தியாவசிமானவை. (3) சேவை: மற்றொருவர் துன்பப்படும் போது, உங்களுக்கு ஏற்படும் வேதனையிலிருந்து இது உங்களைக் காக்கிறது; உங்களது கண்ணோட்டத்தை விசாலமாக்கி, உங்களது விழிப்புணர்வை பரவலாக்கி, உங்களது பரிவை ஆழமாக்குகிறது.அனைத்து அலைகளும் ஒரே கடலிலிருந்தே தோன்றி,அதே கடலிலேயே சங்கமமாகின்றன. சேவை இந்த ஞானத்தை மனதில் வலுவாகப் பதிக்கிறது. (4) பரிசுத்தமான ப்ரேமை : எதிர்வினை, விளைவு அல்லது பரிசைக் கணக்கிடாதீர்கள். ப்ரேமையே அழைக்கிறது; ப்ரேமையே உதவ விழைகிறது. ப்ரேமையே இறைவன், ப்ரேமையில் வாழுங்கள். (5) த்வேஷமின்மை : எந்த ஜீவராசியையும், இரண்டாம் பட்சமாகவோ, தாழ்ந்ததாகவோ, முக்கியத்துவம் அல்லது தேவை அற்றதாகவோ கருதக்கூடாது.ஒவ்வொன்றிற்கும் இறைவன் வடிவமைத்த நாடகத்தில் அதற்கென்றே என ஒதுக்கப்பட்ட ஒரு அங்கம் உள்ளது. எந்த ஜீவராசியையும் ஒருபோதும் அவமதிக்கவோ அல்லது துன்புறுத்தவோ செய்யாதீர்கள்; ஏனெனில் இறைவன் ஒவ்வொரு ஜீவராசியிலும் உறைகிறான்; நீங்கள் செய்யும் அவமதிப்பு ஒரு தெய்வகுற்றமாகி விடும் !
மௌனமே, ஆன்மீக சாதகரின் மொழியாகும் - பாபா