azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Human body is meant to serve others, not to indulge in selfish deeds. As selfishness has become part and parcel of your life, you indulge in many sinful activities. Eschew selfishness, take to selfless service. Give up attachment towards the body. Become attached to the Self. Understand that the same Self (Atma) exists in everybody. Though you find myriad bulbs glowing here, the current that is passing through them is the same. Bodies are like bulbs; the principle of the Atma is the current that is present in them. With such a feeling of oneness, make efforts to alleviate the suffering of your fellowmen. Sage Vyasa has given the essence of eighteen Puranas in the following dictum - “Paropakaraya Punyaya, Papaya Parapidanam” (one attains merit by serving others and commits sin by hurting them). So help ever, hurt never. There is no higher spiritual practice (sadhana) than this. This is the foundation for self-realisation! (Divine Discourse, Apr 14, 2001)
YOU MUST RENDER SERVICE OUT OF SPONTANEOUS URGE FROM WITHIN,
WITH A HEART FILLED WITH LOVE. - BABA
மனித உடல் பிறருக்குச் சேவை செய்வதற்காகவே ஏற்பட்டதே அன்றி, சுயநலமான செயல்களில் ஈடுபடுவதற்காக அல்ல. சுயநலம் என்பது,உங்களது வாழ்க்கைகளின் ஒரு பகுதியாகவே ஆகி விட்டதால், நீங்கள் பல பாவகரமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள். சுயநலத்தை தவிர்த்து விட்டு, தன்னலமற்ற சேவையை மேற்கொள்ளுங்கள். உடல் மீது கொண்டுள்ள பற்றினை விட்டு விடுங்கள். ஆத்மாவுடன் பற்றுதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதே ஆத்மாதான் ஒவ்வொருள்ளும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இங்கு பல மின் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தாலும், அவற்றினுள் பாயும் மின்சாரம் ஒன்றே தான். உடல்கள் அந்த மின் விளக்குகளைப் போன்றவை; ஆத்ம தத்துவமே அவற்றினுள் இருக்கும் மின்சாரமாகும். இப்படிப் பட்ட ஒரு ஒருமை உணர்வோடு, உங்களது சக மனிதர்களின் துயரங்களைத் துடைக்க முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். வியாச முனிவர் 18 புராணங்களின் சாரத்தை இந்த ஒரே வாக்கியத்தில் அளித்துள்ளார் ; ‘’பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடனம் ‘’(பிறருக்கு சேவை செய்வதால் ஒருவர் புண்ணியத்தை அடைகிறார், அவர்களைத் துன்புறுத்துவதால், பாவத்தைப் புரிகிறார்). எனவே, எப்போதும் உதவுங்கள், ஒருபோதும் துன்புறுத்தாதீர்கள். இதை விட உயர்ந்த ஆன்மீக சாதனை எதுவும் இல்லை.இதுவே, ஆத்ம சாக்ஷாத்காரத்தின் அஸ்திவாரம் ஆகும் !
தன்னிச்சையான உள்ளார்ந்த உந்துதலின் மூலம்,ப்ரேமை நிறைந்த இதயத்தோடு, நீங்கள் சேவை ஆற்ற வேண்டும்- பாபா