azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 01 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 01 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

In reality, all the miseries of mankind is caused by mankind itself, not by any extraneous agency. Having all the instruments of joy and contentment in one's possession, if man is miserable, it is only due to his perverseness and his stupidity. He has been warned, over centuries, by the scriptures of all languages that he should give up greed and lust, give up the habit of catering to the senses, and give up the belief that he is just this body and nothing more. Yet he does not know the illness that is torturing him. The disease is due to 'vitamin deficiency,' as they say; the vitamins are satya, dharma, shanti and prema (truth, righteousness, peace and divine love). Take them and you recover; assimilate them into your character and conduct, and you shine with fine mental and physical health. (Divine Discourse, Dec 16, 1964)
‘I – WANT – PEACE”. ‘I’ IS EGO, ‘WANT’ IS DESIRE.
REMOVE EGO AND DESIRE AND YOU WILL HAVE PEACE. - BABA
உண்மையில் மனித குலத்தின் அனைத்து துன்பங்களும் மனித குலத்தினால் தான் ஏற்படுகிறதே அன்றி, வேறோ ஏதோ வெளியில் இருந்து எவராலும் அல்ல. சந்தோஷம் மற்றும் திருப்தி தரும் அனைத்து உபகரணங்களும் ஒருவரிடம் இருந்த போதிலும், மனிதன் துன்பப்படுகிறான் என்றால், அது அவனது மூர்க்கத்தனம் மற்றும் முட்டாள்தனத்தினாலேயே. அவன் பேராசை மற்றும் காமத்தை விடுத்து, புலன்களுக்குத் தீனி போடும் பழக்கத்தைத் துறந்து, தான் வெறும் இந்த உடலே அன்றி வேறு எதுவும் இல்லை என்ற நம்பிக்கையை விட்டு விட வேண்டும் என பல நூற்றாண்டுகளாக, அனைத்து மொழிகளின் புனித நூல்களாலும் எச்சரிக்கப் பட்டுள்ளான். இருந்த போதும்,அவனை வாட்டும் நோய் எது என்று அவன் அறிந்து கொள்ளவில்லை. இது, ’’வைடமின் குறைபாட்டினாலேயே‘’ இந்த வியாதி என்று கூறப்படுவதைப் போலாகும்; அந்த வைடமின்களே சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமை. அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் குணமாகி விடுவீர்கள்; உங்கள் குணநலம் மற்றும் நடத்தையில் அவற்றைக் குவித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் சிறந்த மனம் மற்றும் உடல் நலத்தோடு பிரகாசிப்பீர்கள்.
“ எனக்கு - சாந்தி – வேண்டும் ‘’. ‘’ எனக்கு ‘’ என்ற அஹங்காரம், ‘’ வேண்டும் ‘’ என்ற ஆசை, இந்த அஹங்காரத்தையும், ஆசையையும் நீக்கி விடுங்கள். உங்களுக்கு ‘’ சாந்தி ‘’ கிடைக்கும். - பாபா