azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 27 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 27 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

It serves no purpose if you merely acknowledge that the Lord has come but do not yearn to benefit by the Advent. Offer your entire self, your entire life, to Him; then your adoration will transform and transmute you so fast and completely that you and He can be merged into One. He thinks, feels and acts as you do; you think, feel and act as He does. You will be transformed as a rock is transformed by the sculptor into an idol, deserving the worship of generations of sincere men. In the process you will have to bear many a hammer stroke, many a chisel-wound, for He is the sculptor. He is but releasing you from petrification! Offer your heart to the Lord, let the rest of you suffer transformation at His hands. Do not defile time, or the physical sheath, or this life's chance, using them for paltry ends. (Divine Discourse, Nov 23, 1968)
HAVING BEEN BORN AS HUMAN BEINGS, YOU SHOULD OVERCOME MAYA, HAVE THE VISION OF THE ATMA AND ATTAIN NIRVANA. THIS IS THE PURPOSE OF YOUR LIFE. - BABA
அவதாரத்தின் வருகையால் பயன் பெற விழையாது, இறைவன் வந்து விட்டான் என்று வெறுமனே நீங்கள் ஏற்றுக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. முழுமையாக உங்களையே, உங்கள் வாழ்வனைத்தையும் அவனுக்கு அர்ப்பணியுங்கள்; நீங்களும் அவனும்,ஒன்றரக் கலப்பது என்பது நிகழும் அளவிற்கு, பின்னர் உங்களது போற்றுதல், மிக விரைவாகவும், முழுமையாகவும் உங்களை உருமாற்றி உங்களது பண்பையும் மாற்றிவிடும். அவன் உங்களைப் போலவே சிந்தித்து, உணர்ந்து செயல்படுவான்; நீங்களும் அவனைப் போலவே சிந்தித்து, உணர்ந்து, செயல்படுவீர்கள். எவ்வாறு, ஒரு பாறை, சிற்பியால், ஆத்மார்த்தமான பக்தர்களின் பல தலைமுறைகள் வழிபடுவதற்கு ஏற்ற ஒரு விக்ரஹமாக மாறுகிறதோ, அவ்வாறு நீங்கள் மாறி விடுவீர்கள். இறைவனே அந்த சிற்பி என்பதால், இந்த முறையில், நீங்கள் பல சம்மட்டி அடிகளையும் , உளியின் பல செதுக்குதல்களையும், தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அவன் , நீங்கள் அச்சத்தினால் கல்லாக உறைந்து விடுவதிலிருந்து உங்களை விடுவிக்கிறான் ! உங்கள் இதயத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள்; உங்களின் மீதிப் பாகங்கள் அவனது கரங்களால் உருமாற்றத்தை அனுபவிக்கட்டும். காலத்தையோ அல்லது உங்களது உடலையோ அல்லது இந்த வாழ்வில் கிடைத்த வாய்ப்பையோ ,அற்பமான குறிக்கோள்களுக்காக பயன்படுத்தி, மாசுபடுத்தி விடாதீர்கள்.
மனிதர்களாகப் பிறந்து விட்ட பிறகு, நீங்கள் மாயையை வென்று, ஆத்ம சாக்ஷாத்காரத்தைப் பெற்று,முக்தியை அடைய வேண்டும். இதுவே உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகும்- பாபா