azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

You have to read the newspaper to know how mad and foolish the world is; how futile is heroism and how momentary the glory. And after reviewing the information it conveys, you throw it aside; it is now a tasteless waste. So too, you should live but once; live such that you are born but once. Do not fall in love with the world so much that your false fascination brings you again and again into this delusive amalgam of joy and grief. Unless you stand back a little, away from entanglement with the world, knowing that it is all a play whose director is God, you are in danger of being too closely involved. Use the world as a training ground for sacrifice, service, expansion of the heart, and cleansing of the emotions. That is the only value it has. (Divine Discourse, Mar 28, 1967)
BE CLEAR AND CONTENT. BE MODERATE AND WISE.
BE VIGILANT AND STEADY. BE EARNEST AND SWEET. - BABA
உலகம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது, முட்டாள்தனமானது,வீரம் என்பது எவ்வளவு வீணானது, புகழ் எவ்வளவு தாற்காலிகமானது என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள செய்தித்தாளை நீங்கள் படித்தாலே போதும். அது தரும் செய்தியை ஆய்வு செய்த பிறகு,அதைத் தூர எறிந்து விடுகிறீர்கள்; அது இப்போது ஒரு ருசியற்ற குப்பையே.அதைப் போலவே, நீங்களும் ஒரு முறை தான் வாழ வேண்டும்;ஒரு முறை மட்டுமே பிறப்பதற்குத் தக்கவாறு வாழுங்கள். உங்களது பொய்யான கவர்ச்சி , இந்த சுகம் மற்றும் துக்கத்தின் மயங்க வைக்கும் இரசக்கலவைக்கு மீண்டும் மீண்டும் உங்களை கொண்டு வரும் அளவிற்கு இந்த உலகத்தின் மீது நேசம் கொண்டு விடாதீர்கள். இவை அனைத்தும் இறைவனையே இயக்குனராகக் கொண்ட ஒரு நாடகமே என்பதை உணர்ந்து, உலகத்தின் சிக்கலில் இருந்து விலகி ,சிறிது பின் சென்று நின்றால் ஒழிய, இதில் நீங்கள் மிகவும் நெருக்கமாக மாட்டிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கிறீர்கள். தியாகம், சேவை, இதயத்தை விசாலமாக்குவது மற்றும் உணர்வுகளைத் பரிசுத்தப்படுத்துவது ஆகியவற்றின் ஒரு பயிற்சிக் களமாக இந்த உலகைப் பயன்படுத்துங்கள். இதற்குள்ள மதிப்பு அது ஒன்று மட்டுமே.
தெளிர்ந்தவராக,திருப்தியானவராக,மிதமானவராக,புத்திசாலியாக, விழிப்புள்ளவராக,நிலையானவராக,ஆர்வமுள்ளவராக, இனிமையானவராக இருங்கள்- பாபா