azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The rulers who frame and foster the educational system of the country are responsible for the discontent, disillusionment and consequent delinquencies and disturbances of the students. They pay attention only to the physical and intellectual training of the youth; they forget that attention must also be paid to mental, moral and spiritual development, so that an integrated personality can emerge. Now, a child is put to school so that years later he may get a cushy job! Schooling is thought to be for gaining a living, not for gaining the ultimate in life. Nowhere the youth are trained to earn shanti (equanimity, peace); everywhere, the aim is a comfortable life. The search for comfort, riches, fame, power over others - these make one so egoistic that one is a danger to oneself and others. The only safe path is to seek bliss within oneself, not in or through others. There is great joy awaiting the person who radiates compassion, truth, patience, humility, reverence and piety. (Divine Discourse, Jul 30, 1967)
WHEN YOUR HEART IS PURE, THE LIGHT OF WISDOM SHINES! - BABA
நாட்டின் கல்வி முறையை வடிவமைத்து, வளர்க்கும் ஆட்சியாளர்களே, மாணவர்களிடம் காணப்படும், அதிருப்தி,ஏமாற்றம் மேலும் அதன் விளைவாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் குழப்பங்களுக்கு, பொறுப்பாவார்கள்.அவர்கள் இளைஞர்களின் உடல் மற்றும் புத்திக்கான பயிற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்; அவர்கள், ஒரு முழுமையான மனிதர் உருவாவதற்குத் தேவையான, மனம், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் மீதும் கூட கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.இப்போது, ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது,அது பிற்காலத்தில் ஒரு சொகுசான வேலையைப் பெறுவதற்காகவே ! பள்ளிப் படிப்பு ஒரு வாழ்வதற்கான வசதியைப் பெறுவதற்காகவே என எண்ணப் படுகிறதே அன்றி, வாழ்வின் குறிக்கோளை அடைவதற்காக அல்ல . இளைஞர்களுக்கு மனச்சாந்தியை எவ்வாறு பெறுவது என்பது பற்றி எங்குமே பயிற்சி அளிக்கப் படுவதில்லை; எங்கு பார்த்தாலும், ஒரு சௌகரியமான வாழ்க்கையே குறிக்கோளாக இருக்கிறது. சௌகரியம், செல்வம், புகழ், பிறர் மீது ஆதிக்கம் ஆகியவற்றைத் தேடுவது - இவை ஒருவரை, அவருக்கும், பிறருக்கும் அவர் ஒரு அபாயகரமானவராக இருக்கும் அளவு அஹங்காரம் கொண்டவராக ஆக்கி விடுகிறது. பிறருக்குள்ளோ அல்லது அவர்கள் மூலமாகவோ அல்லாது, ஒருவர் தனக்குள்ளேயே, ஆனந்தத்தை நாடுவது ஒன்றே பாதுகாப்பான பாதையாகும். பரிவு, சத்தியம், பொறுமை, பணிவு, பயபக்தி, மற்றும் இறைபக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் மனிதருக்கு, மிகச் சிறந்த ஆனந்தம் காத்துக் கொண்டு இருக்கிறது.
உங்கள் இதயம் பரிசுத்தமாக இருக்கும் போது,ஞான ஒளி பிரகாசிக்கிறது- பாபா