azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Starting with self-confidence, get to self-satisfaction and then, self-sacrifice, and finally, self-realisation. The ultimate step of self-realisation begins with self-confidence as the basis. You must therefore develop confidence in your own self. Without developing self-confidence, if all the time you are thinking of some power being with someone else, when are ‘you’ going to acquire the requisite power and confidence to reach your goal? Peace and bliss are within you - they are not something external to you. You may think, going to the Himalayas will give you peace. Yes, your body may go to Himalayas; but what about your mind? If it is left behind in the city, how are you going to get peace? Similarly, you may have brought your body to Puttaparthi, but if you still have the same habits that you are used to in the past, what is the use? Body is not the essential thing. The transformation, the change should come in your mind. (Divine Discourse, Mar 28, 1975)
COURAGE DURING PAIN OR ADVERSITY (FORTITUDE) ENDOWS YOU WITH SELF-CONFIDENCE.
SELF-CONFIDENCE GENERATES IMMENSE INTERNAL POWER. - BABA
ஆத்ம விசுவாசத்திலிருந்து தொடங்கி, ஆத்ம திருப்தியை அடைந்து,பின் ஆத்ம தியாகத்தையும், இறுதியில் ஆத்ம சாக்ஷாத்கரத்தை அடையுங்கள்.இறுதி நிலையான ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடைவது, ஆத்ம விசுவாசத்தையே ஆதாரமாகக் கொண்டு தொடங்குகிறது. எனவே, நீங்கள் உங்கள் மீதே நம்பிக்கையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.ஆத்ம விசுவாசத்தை ( தன்னம்பிக்கை ) அபிவிருத்தி செய்து கொள்ளாமல்,ஏதோ ஒரு சக்தி,யாரோ ஒருவரிடம் இருப்பதாக நீங்கள் எப்போதும் எண்ணிக் கொண்டே இருப்பீர்களானால், உங்களது குறிக்கோளை அடைவதற்குத் தேவையான சக்தி மற்றும் நம்பிக்கையை எப்போது பெறப்போகிறீர்கள் ? சாந்தி மற்றும் ஆனந்தம் உங்களுள்ளேயே இருக்கிறது-அவை உங்களுக்கு ஏதோ வெளியில் இருக்கும் ஒன்றல்ல. இமாலயத்திற்குச் சென்று விட்டால், உங்களுக்கு சாந்தி கிடைக்கும் என நீங்கள் எண்ணக் கூடும். ஆமாம், உங்கள் உடல் இமய மலைக்குச் செல்லக் கூடும், ஆனால், உங்கள் மனதின் நிலை என்ன? அதை பின்னால் நகரத்தில் விட்டுச் சென்றிருந்தால், உங்களுக்கு சாந்தி எப்படிக் கிடைக்கும்? அதைப் போலவே, நீங்கள் உங்கள் உடலை புட்டபர்த்திக்குக் கொண்டு வந்திருக்கலாம், ஆனால், கடந்த காலத்தில் உங்களுக்கு இருந்த அதே பழக்கங்களை நீங்கள் இன்னமும் வைத்துக் கொண்டிருந்தால், அதனால் என்ன பயன்? உடல் முக்கியமானதல்ல. உங்கள் மனதில் முழுமையான மாற்றம் வர வேண்டும்.
வேதனை அல்லது வீழ்ச்சியின் போது, தைரியமாக இருப்பது உங்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது- தன்னம்பிக்கை அளவற்ற ஆத்மபலத்தை உருவாக்குகிறது - பாபா