azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
First and foremost, you should show gratitude to your parents, love and respect them. Your blood, food, head, and money - all these are the gifts of your parents. You do not receive these gifts directly from God. All that is related to God is only indirect experience. It is only the parents whom you can see directly and experience their love. Children can understand the meanings of the words ‘fox’ or ‘dog’ only when they see their pictures. Similarly, it is only after seeing the parents that one can understand the existence of God. Only when you love and respect your parents you can understand the love of the Jagatmata and Jagatpita (Divine Parents). This is what I tell you often: if you understand the ‘I’ principle in you, you will understand the ‘I’ in everybody. Vyashti (individual) has emerged from samashti (society), samashti from srushti (creation), and srushti from Parameshti (Creator). Only when you understand the principle of creation, can you understand the Creator. (Divine Discourse, May 6, 1999.)
LOOK UPON YOUR BODY AS A SHRINE IN WHICH THE DIVINE IS INSTALLED.
DEDICATE ALL ACTIONS TO GOD. - BABA
முதன் முதலில், நீங்கள் உங்களது பெற்றோர்களுக்கு நன்றி கூறி, அவர்களை நேசித்து, மரியாதை செலுத்த வேண்டும். உங்களது ரத்தம்,உணவு,மூளை மற்றும் பணம் (ப்ளட்டு,ஃபுட்டு,ஹெட்டு, துட்டு )- இவை அனைத்தும் உங்கள் பெற்றோர்களிடமிருந்து கிடைத்த பரிசுகளே.நீங்கள் இந்தப் பரிசுகளை , நேரடியாக இறைவனிடமிருந்து பெறுவதில்லை.இறைவனைச் சார்ந்த அனைத்தும், மறைமுகமான அனுபவங்கள் மட்டுமே. பெற்றோர்களை மட்டுமே நீங்கள் நேரடியாகக் கண்டு, அவர்களது ப்ரேமையை அனுபவிக்க முடியும். குழந்தைகள், ‘’ நரி ‘’ அல்லது ‘’ நாய்’’ என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை, அவற்றின் படங்களைப் பார்க்கும் போது தான் புரிந்து கொள்கிறார்கள். அதைப் போலவே, பெற்றோர்களைப் பார்த்த பின் தான், ஒருவர் இறைவன் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் உங்கள் பெற்றோர்களை நேசித்து, மதித்தால் தான், ஜகத்மாதா மற்றும் ஜகத் பிதாவான இறைவனின் ப்ரேமையைப் புரிந்து கொள்ள முடியும்.இதைத் தான் நான் உங்களுக்கு அடிக்கடிக் கூறுகிறேன்- உங்களுள் உள்ள, ‘’ நான்’’ என்ற கொள்கையைப் புரிந்து கொண்டால், ஒவ்வொருவருள்ளும் உள்ள ‘’ நான் ‘’ என்பதைப் புரிந்து கொள்ள இயலும். வ்யஷ்டி ( தனி மனிதன் ), சமஷ்டியிலிருந்து ( சமூகம்) வெளிப்படுகிறான்; சமஷ்டி, ச்ருஷ்டியிலிருந்தும் ( படைப்பு ), ச்ருஷ்டி, பரமேஷ்டியிலிருந்தும் ( படைப்பவன் ) வெளிப்படுகின்றன. படைப்பின் கொள்கையைப் புரிந்து கொண்டால் தான், நீங்கள் படைத்தவனைப் புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் உடலை, இறைவன் உறையும் ஆலயமாகக் கருதுங்கள்.
அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்- பாபா