azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Everyone dresses well before going out, because they want to be respected. While we feel so concerned about the state of our house or clothes, the heart in which the Divine resides is utterly polluted. It is filled with unclean thoughts and impure fancies! What you are doing is concealing your thoughts, and pretending to be impeccable and externally well-dressed. Of what use is such conduct? What is the use in attaching importance to the external appearance of the body and value the respect shown to it? The one who cares only for the body and ignores the state of their mind is a two-legged animal. Honestly examine the impure state of your minds and introspect the double life you are leading, that will help you to get rid of your bad thoughts in a moment! (Divine Discourse, May 20, 1984)
WHEN YOUR MIND IS PURE, UNSELFISH AND UNWAVERING, THE DIVINE APPEARS
IN ALL HIS PURITY AND FULLNESS. - BABA
தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, வெளியில் செல்வதற்கு முன், ஒவ்வொருவரும் நன்றாக உடை அணிந்து கொள்கிறார்கள். நாம் நம்முடைய இல்லம் அல்லது ஆடைகளைப் பற்றி எவ்வளவோ கவலைப் படும் அதே நேரத்தில், இறைவன் உறையும் ஆலயமான நமது இதயம், முழுவதுமாக மாசடைந்துள்ளது. அது கீழ்த்தரமான சிந்தனைகள் மற்றும் தூய்மையற்ற கற்பனைகளால் நிறைந்துள்ளது ! நீங்கள் செய்வது எல்லாம், உங்களது சிந்தனைகளை மறைத்து, அப்பழுக்கு அற்றவர்களாகவும், வெளியில் நன்கு ஆடை அணிந்தவர்கள் போன்றும் நடிப்பது தான். இப்படிப் பட்ட நடத்தையினால் என்ன பயன்? உடலின் வெளிப்புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதனால் அதற்கு அளிக்கப் படும் மதிப்பிற்கு மரியாதை காட்டுவதால் என்ன பயன்? உடலுக்காக மட்டும் கவனம் செலுத்தி, அவர்களது மனதின் நிலையை புறக்கணிப்பவர் ஒரு இரண்டு கால் படைத்த மிருகமே. உங்களது மனங்களின் தூய்மையற்ற நிலையை நேர்மையாக ஆராய்ந்து, நீங்கள் நடத்தும் இரட்டை வேஷ வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்; அது , ஒரு கணத்தில், நீங்கள் உங்களது தீய சிந்தனைகளை விட்டொழிக்க உதவும் !
எப்போது உங்கள் மனம் தூய்மையாகவும், சுயநலமற்றும், நிலைகுலையாமலும் இருக்கிறதோ, அப்போது இறைவன் தனது அனைத்து பரிசுத்தம் மற்றும் பரிபூரணத்துவத்துடன் தோன்றுகிறான் - பாபா