azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Since Islam means surrender to God, whoever lives in peace and harmony in society, in a spirit of surrender and dedication, really speaking, belongs to Islam. Islam insists on full coordination between thought, word and deed. Muslim holy men and sages have been emphasising that we must inquire into the validity of the 'I' which feels it is the body and the 'I' which feels it is the mind and reach the conclusion that the real 'I' is the Self yearning for the Omniself, God. Fasting and prayers during the month of Ramzan are specially designed to awaken and manifest this realisation. Consider any religion, whatever it may be, you will find that it emphasises on unity, harmony and equal-mindedness. Therefore, all of you must cultivate love, tolerance and compassion and demonstrate these universal principles in all your daily activities, every day. This is the Message I give you today with My Blessings. (Divine Discourse, Jul 12, 1983)
LOVE IS THE COMMON DENOMINATION FOR ALL VALUES.
IT IS THE FORM OF GOD, FOR GOD IS LOVE. - BABA
இஸ்லாம் என்றால், இறைவனை சரணாகதி அடைவது என்று பொருள் கொண்டதால், சமுதாயத்தில், ஒரு சரணாகதி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன், சாந்தி மற்றும் இசைவோடு வாழும் எவராக இருந்தாலும், உண்மையில் அவர்கள் இஸ்லாத்தைச் சார்ந்தவரே. இஸ்லாம், சிந்தனை, சொல் மற்றும் செயலுக்கு இடையில் முழு ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறது. இஸ்லாமிய சாதுக்களும், ஆன்றோர்களும், ‘’ நான் ‘’ என்பது உடலே என்ற உணர்வு மற்றும், ‘’ நான்’’ என்பது மனமே என்ற உணர்வு ஆகியவற்றின் ஏற்புடமையை நாம் ஆராய்ந்து, ‘’ நான்’’ என்பது, அந்த பரமாத்மாவான இறைவனுக்காக ஏங்கும் ஆத்மாவே என்ற முடிவிற்கு வர வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டு வந்துள்ளார்கள். ரம்ஜான் மாதத்தின் போது செய்யப்படும் உபவாசம், மற்றும் பிரார்த்தனைகள், இந்த உணர்வைத் தட்டி எழுப்பி, வெளிப் படுத்துவதற்காகவே குறிப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளன. எந்த மதத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்; நீங்கள், அது ஒற்றுமை, இசைவு மற்றும் சமமான மனப்பாங்கு ஆகியவற்றையே வலியுறுத்துவதைக் காண்பீர்கள். எனவே நீங்கள் அனைவரும், ப்ரேமை, சகிப்புத் தன்மை மற்றும் கருணையை அபிவிருத்தி செய்து கொண்டு அந்த பிரபஞ்சமயமான கோட்பாடுகளை, உங்களது அனைத்து அன்றாட செயல்களிலும், ஒவ்வொரு நாளும் எடுத்துக் காட்ட வேண்டும். என் ஆசிகளுடன், நான் உங்களுக்கு இன்று வழங்கும் உபதேசம் இதுவே !
அனைத்து பண்புகளுக்கும் பொதுவான அடிப்படை ப்ரேமையே. அது இறைவனின் ரூபமே, ஏனெனில் ப்ரேமையே இறைவன் - பாபா