azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
You must be humble, but yet strong to resist temptation. Do not yield like cowards to the sly insinuations of the senses. Your time in school has to be used not only in the task of collecting information and earning certain skills that will give you an income on which you can live; it must also be used to acquire the art of being content and calm, collected and courageous. You must also cultivate at school an ardent thirst for knowing the truth of the world and of your own self. Your words must be like honey, your hearts must be as soft as butter, your outlook must be like the lamp, illumining and not confusing. Be like the umpire on the football field, watching the game, judging the play according to the rules laid down, unaffected by success or reverse of this team or that. (Divine Discourse, Mar 13, 1964)
WHEN YOU HAVE FAITH IN THE DIVINE, LIFE BECOMES A VICTORIOUS JOURNEY. - BABA
நீங்கள் பணிவுடன் இருக்க வேண்டும்; ஆனால், அதே சமயம் ஆசைத் தூண்டுதலை எதிர்க்கும் அளவு மன வலிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். கோழைகளைப் போல, புலன்களின் கபடமான ஆலோசனைகளுக்கு இடம் அளித்து விடாதீர்கள். பள்ளி வாழ்க்கையின் உங்கள் நேரத்தை, நீங்கள் வாழ்வதற்குத் தேவையான வருமானத்தை அளிக்க வல்ல சில திறன்களைப் பெறுவதற்காகவும்,, சில தகவல்களைச் சேகரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தாது, அதை, திருப்தி மற்றும் அமைதி, பொறுமை மற்றும் தைரியத்துடன் இருக்கும் கலையையும் கற்றுக் கொள்வதற்காகவும் கூட பயன்படுத்த வேண்டும்.இந்த உலகத்தைப் பற்றிய மற்றும் உங்களைப் பற்றிய சத்தியத்தையும் தெரிந்து கொள்வதற்கான தணியாத தாகத்தையும் கூட, நீங்கள் பள்ளியில் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வார்த்தைகள் தேனாக இனிக்க வேண்டும்; உங்கள் இதயங்கள் வெண்ணையைப் போல மிருதுவாக இருக்க வேண்டும்; உங்கள் தொலைநோக்கு ஒரு விளக்கைப் போல, குழப்பமின்றி ஒளியூட்டுவதாக இருக்க வேண்டும். விளையாட்டை கவனித்து, அதன் விதிமுறைகளின் படி, சீர்தூக்கிப் பார்த்து, எந்த ஒரு அணியின் வெற்றி,தோல்வியால் பாதிக்கப் படாமல் இருக்கும், கால் பந்துப் போட்டியின் அரங்கில் உள்ள, ஒரு நடுவரைப் போல இருங்கள் !
உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கும் போது, வாழ்க்கை ஒரு வெற்றிப் பயணமாக ஆகி விடுகிறது - பாபா