azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
You should have single-minded devotion towards God. Your faith should be total and unconditional. If your faith is unsteady with ‘bumps and jumps’, you will be confused and will become restless. Keep your desires under control. Limitless desires will take you away from Divinity. Annihilation of desires will lead you to the principle of unity. You should continuously develop virtues and lead a good life. Understand the purpose of education and act accordingly. Only then will your birth as a human being be meaningful. One electric bulb can provide illumination to many. Likewise, a heart filled with love can illumine many lives. The educated should not look down upon the uneducated. If they are truly educated, they will treat everyone equally and develop unity. Where there is unity, there is purity. When unity and purity are present, you are bound to experience Divinity. Love is the basis for unity. Know that if differences crop-up, pure love is absent. (Divine Discourse, Jan 14, 2006)
TRUE SPIRITUALITY CONSISTS IN PROMOTING HUMAN UNITY THROUGH HARMONIOUS LIVING
AND SHARING THE JOY WITH ONE AND ALL. - BABA
உங்களுக்கு இறைவன் பால் ஒருமுகச் சிந்தனை கொண்ட பக்தி இருக்க வேண்டும். உங்களது பக்தி முழுமையானதாகவும்,நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும். உங்களது நம்பிக்கை, ‘’ மேலும், கீழும் ஏறிக் குதித்து ‘’ நிலையற்றதாக இருந்தால், நீங்கள் குழப்பமடைந்து, அமைதியற்றவர்களாக ஆகி விடுவீர்கள்.உங்களது ஆசைகைளக் கட்டுக்குள் வைத்திருங்கள். வரையற்ற ஆசைகள் உங்களை தெய்வீகத்திலிருந்து விலக்கி விடும். ஆசைகளை அழிப்பது உங்களை ஒற்றுமைத் தத்துவத்திற்கு இட்டுச் செல்லும். நீங்கள் இடையறாது நற்குணங்களை வளர்த்துக் கொண்டு, ஒரு நல்ல வாழ்க்கை நடத்த வேண்டும்.கல்வியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு நடத்து கொள்ள வேண்டும்.அதன் பிறகே, நீங்கள் மனிதப் பிறவி எடுத்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.ஒரு மின் விளக்கு பலருக்கு ஒளியூட்ட முடியும். அதைப் போலவே, ப்ரேமை நிறைந்த ஒரு இதயம், பலரின் வாழ்க்கைகளுக்கு விளக்கேற்ற முடியும்.படித்தவர்கள், படிக்காதவர்களை ஏளனமாக நோக்கக் கூடாது. அவர்கள் உண்மையிலேயே கற்றவர்கள் என்றால், ஒவ்வொருவரையும் சமமாகக் கருதி, ஒற்றுமையை அபிவிருத்தி செய்வார்கள். ஒற்றுமை இருக்கும் இடத்தில் பரிசுத்தம் இருக்கும். ஒற்றுமையும், பரிசுத்தமும் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக தெய்வீகத்தை அனுபவிக்க முடியும். ப்ரேமையே, ஒற்றுமைக்கு ஆதாரம். வித்தியாசங்கள் தோன்றுமானால், தூய ப்ரேமை அங்கு இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உண்மையான ஆன்மீகம் என்பது, இசைவான வாழ்க்கை நடத்தி, எல்லோருடனும் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், மனித குல ஒற்றுமையை அபிவிருத்தி செய்வதில் தான் இருக்கிறது - பாபா