azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
To fulfil Mother Easwaramma’s three noble desires, I provided drinking water not only to Puttaparthi but to all the surrounding villages too. The small school that I established is now a big university. The small hospital that I constructed has now become a Super Speciality hospital. Mother Easwaramma shed tears of joy when she saw that her only desires were fulfilled in a grand manner. She led a life of happiness and contentment and breathed her last peacefully. The first and foremost duty of every child is to fulfil the wishes of one’s mother and make her happy. Secondly, serve all to the extent possible. You need not take up any service activity beyond your means and capacity. Thirdly, if you find your neighbours suffering, give them solace. Try to help and make them happy. This is what I expect from you. I exhort all of you to practice these three principles of service, experience bliss and share it with one and all. (Divine Discourse, May 6, 2006)
IF YOU HONOUR YOUR MOTHER, THE MOTHER OF THE UNIVERSE
WILL GUARD YOU AGAINST HARM. - BABA
அன்னை ஈஸ்வரம்மாவின் மூன்று உன்னதமான விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக, நான் புட்டபர்த்திக்கு மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் கூட குடி தண்ணீர் அளித்தேன்.நான் நிறுவிய அந்தச் சிறிய பள்ளிக்கூடம், இன்று ஒரு பெரிய பல்கலைக்கழகமாக ஆகியுள்ளது.நான் கட்டிய அந்தச் சிறிய வைத்தியசாலை, இப்போது ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக ஆகி விட்டது.தனது அனைத்து விருப்பங்களும், ஒரு மகத்தான முறையில் நிறைவேறியிருப்பதைக் கண்டு, அன்னை ஈஸ்வரம்மா ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.அவர் சந்தோஷமான மற்றும் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து, மனச் சாந்தியுடன் காலமானார்.ஒவ்வொரு பிள்ளையின் முன் முதற் கடமை, தனது தாயின் ஆசைகளைப் பூர்த்தி செய்து அவளை ஆனந்தப் படுத்துவதே. இரண்டாவதாக, முடிந்த அளவு அனைவருக்கும் சேவை ஆற்றுங்கள். உங்களுடைய வசதி மற்றும் திறமைக்கு மீறிய எந்த சேவைப் பணியையும் நீங்கள் செய்ய வேண்டாம்.மூன்றாவதாக,உங்களது அக்கம் பக்கத்தினர் துன்பப் பட்டுக் கொண்டு இருந்தால்,அவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள். அவர்களுக்கு உதவி செய்ய முயன்று, அவர்களை சந்தோஷப் படுத்துங்கள். இதைத் தான் நான் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன். இந்த மூன்று சேவைக் கோட்பாடுகளை நீங்கள் அனைவரும் கடைப்பிடித்து, ஆனந்தத்தை அனுபவித்து,அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.
நீங்கள் உங்கள் மாதாவை மதித்தால், லோகமாதா உங்களை எந்தத் தீங்கிலிருந்தும் காத்திடுவாள்- பாபா