azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
There is no love greater than mother’s love in this world. It is imbued with immense power. But such a sacred principle of mother’s love is being neglected today. Mothers are being treated like servants. When parents grow old, they should be looked after with love and care. Instead they are being sent to old age homes. One who ill-treats his parents is bound to suffer a similar fate at the hands of his children. As is the feeling, so is the result (Yad bhavam tad bhavati). Whatever actions you do, they will come back to you as reaction, reflection and resound. Love your mother. Then you will be loved by all. As is the seed, so is the sapling. Hence, first and foremost, develop sacred and selfless love. Be careful to not taint your love with selfishness and self-interest. When everyone shares pure love with each other, the whole world will be filled with happiness, peace and joy. (Divine Discourse, May 06, 2006)
IT IS THE NOBLE THOUGHTS OF THE MOTHER WHICH MAKE THE CHILDREN GREAT. - BABA
தாயின் அன்பை விடச் சிறந்த அன்பு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. அது அளவற்ற ஆற்றல் படைத்தது. ஆனால், இப்படிப் பட்ட புனிதமான தாயன்புத் தத்துவம் இன்று உதாசீனப் படுத்தப் படுகிறது. தாய்மார்கள், வேலைக்காரர்கள் போல நடத்தப் படுகிறார்கள். பெற்றோர்களுக்கு வயதாகிய பின் ,அவர்கள் அன்புடனும், பரிவுடனும் நடத்தப் பட வேண்டும். மாறாக, அவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்கள்.தனது பெற்றோர்களை கொடுமைப் படுத்தும் ஒருவர், அதே விதமான விதியை கட்டாயம் தனது குழந்தைகளிடமிருந்து அனுபவிக்க நேரிடும். உணர்வு எப்படியோ, விளைவு அப்படியே ( யத் பாவம், தத் பவதி). நீங்கள் ஆற்றுகின்ற செயல்கள் எதுவாக இருந்தாலும், அவை பிரதிசெயல், பிரதிபலிப்பு, மற்றும் ப்ரதித்வனியாகத் திரும்பி உங்களுக்கே வரும். உங்கள் தாயை நேசியுங்கள். பின்னர் , நீங்கள் எல்லோராலும் நேசிக்கப் படுவீர்கள். விதை எப்படியோ,செடி அப்படியே. எனவே, முதன் முதலில், புனிதமான, தன்னலமற்ற ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். உங்களது ப்ரமையில் சுயநலம் மற்றும் சுயலாபத்தின் கரை படிந்து விடாமல் இருப்பதில் மிகவும் கவனமாக இருங்கள். எப்போது ஒவ்வொருவரும், மற்றவருடன் பரிசுத்தமான ப்ரேமையை பகிர்ந்து கொள்கிறார்களோ, அப்போது இந்த உலகனைத்தும் சாந்தி, சந்தோஷம் மற்றும் ஆனந்தத்தால் நிரம்பி இருக்கும்.
தாயின் சீரிய சிந்தனைகளே, குழந்தைகளை
தலை சிறந்தவர்களாக ஆக்குகிறது - பாபா