azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Each one of you must make your own heart a Prasanthi Nilayam. Transformation must begin from this very moment. Analyse your words, deeds and thoughts, and get rid of the evil ones that harm you and others. Cultivate fortitude (sahana), firm peace (shanti), and speaking the truth (satya). Presently your mind flutters and squats on all and sundry objects in the Universe. It refuses to stay only on one idea - God. Like the fly that sits on fair and foul, denies itself the opportunity of sitting on a hot cinder, your mind too flees from all thoughts of God. The fly will be destroyed when it sits on fire; so too your mind will be destroyed, when it dwells on God. Desire is the very same stuff of which the mind is made; when mind becomes non-existent, you become free. Desires cease, when God seizes the mind. The death of mind or mergence with the Lord is called mano-nigraha. (Divine Discourse, Sep 26, 1965.)
WHEN GOD (RAMA) ENTERS THE MIND, DESIRE (KAMA) HAS NO PLACE THEREIN. - BABA
நீங்கள் ஒவ்வொருவரும், உங்களது சொந்த இதயங்களையே ஒரு பிரசாந்தி நிலயமாக ஆக்க வேண்டும்.மனமாற்றம், இந்தத் தருணத்திலிருந்தே தொடங்க வேண்டும். உங்களது சொற்கள்,செயல்கள் மற்றும் சிந்தனைகளை ஆராய்ந்து, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் கொடியவற்றை விட்டொழியுங்கள். சகிப்புத் தன்மையையும் ( சஹானா), உறுதியான மனஅமைதியையும்( சாந்தி), உண்மையைப் பேசுவதையும் (சத்யம்),வளர்த்துக் கொள்ளுங்கள். தற்போது, உங்கள் மனம் பறந்தடித்துக் கொண்டு, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களிலும் சென்று அமர்ந்து கொள்கிறது. அது, இறைவன் என்ற ஒரே ஒரு சிந்தனையில் நிலை கொள்ள மறுக்கிறது. ஒரு கொழுந்து விட்டு எரியும் தணலில் அமர மறுத்து, நல்லவை மற்றும் கெட்டவை என அனைத்திலும் அமரும் ஈயைப் போல, உங்கள் மனமும், அனைத்து இறைச் சிந்தனைகளிலிருந்து பறந்தோடி விடுகிறது. அந்த ஈ தணலில் அமர்ந்தால், அழிந்து விடும்; அதைப் போல உங்கள் மனமும், இறைவன் மீது நிலை கொண்டால், அழிக்கப் பட்டு விடும். மனம் என்பது, ஆசைகளால் ஆன ஒன்றே; மனமே இல்லை என்று ஆகி விட்டால், நீங்கள் விடுதலை அடைந்து விடுகிறீர்கள். இறைவன் மனதை ஆக்ரமித்து விட்டால், ஆசைகள் அழிந்து விடுகின்றன. மனதின் மரணம் அல்லது இறைவனுடன் ஒன்றரக் கலப்பதே மனோ நிக்ரஹம் எனப் படுகிறது.
ஆண்டவன் ( ராமா ) மனதில் நுழைந்து விட்டால்,
ஆசைக்கு ( காமா ), அங்கு இடமில்லை- பாபா