azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The love that you have cultivated for men, women and objects must be sublimated into pure, divine worship. Then it gets transmuted as Bhakthi (Love of God). Convince yourself that the Lord is in you, as the charioteer, holding the reins of the five horses (the senses) and giving you constant counsel, as He did when Arjuna prayed to Him, to lead and guide. Then, it becomes easy for you to convince yourself that the self-same charioteer is leading and guiding all other men and even all other beings. When you are established in this faith firmly, you become free of hate and malice, greed and envy, anger and attachment. Pray to the Lord to strengthen this conviction and this faith; He will open your eyes to the Truth and reveal to you that He is the Sanathana Sarathi (Eternal Charioteer) in all. That revelation will confer on you incomparable Ananda, and grant you kinship with Creation's manifoldness. (Divine Discourse, Jul 31, 1967)
CONSIDER ALL YOUR ACTS AS WORSHIP. DUTY IS GOD, WORK IS WORSHIP. WHATEVER HAPPENS ACCEPT IT GLADLY AS HIS HANDIWORK, A SIGN OF HIS COMPASSION. - BABA
ஆண்கள், பெண்கள் மற்றும் பொருட்கள் மீது நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள அன்பை, பரிசுத்தமான, தெய்வீக ப்ரேமையாக, மேன்மைப் படுத்த வேண்டும். பின்னர், இதுவே, இறை பக்தியாக பரிமளிக்கும். தன்னை வழி நடத்தி இட்டுச் செல்லுமாறு, தன்னைப் பிரார்த்தித்த, அர்ஜூனனை பகவான் எவ்வாறு செய்தாரோ, அவ்வாறே, உங்களுள் உறையும் இறைவன், ஐம்புலன்கள் எனும் குதிரைகளின் கடிவாளங்களை பிடித்துக் கொண்டு, உங்களுக்கு இடையறாத அறிவுரை அளித்துக் கொண்டு இருக்கும் சாரதியாக இருப்பார் என்பதில் நீங்களே நம்பிக்கை கொள்ளுங்கள். பின்னர், அதே சாரதியே அனைத்து மனிதர்கள் , ஏன் அனைத்து ஜீவராசிகளையும் வழி நடத்திக் கொண்டு இருக்கிறார், என்பதை நீங்கள் நம்புவது எளிதாக இருக்கும். எப்போது இந்த நம்பிக்கையில் நீங்கள் உறுதியாக நிலை கொள்கிறீர்களோ, அப்போதே, வெறுப்பு மற்றும் வன்மம்,பேராசை மற்றும் பொறாமை, கோபம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றிலிருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள். இந்தத் தீர்மானம் மற்றும் நம்பிக்கை வலுப்பெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்தியுங்கள்; அவன் உங்களது கண்களை சத்யத்தை நோக்கித் திறந்து, அவனே, அனைவரிலும் சனாதன சாரதியாக இருக்கிறான் என்பதை உங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுவான்.அந்த வெளிப்பாடு, உங்களுக்கு இணையற்ற ஆனந்தத்தைக் கொடுத்து,படைப்பின் எண்ணற்ற அம்சங்களோடான உறவை அளித்திடும்.
உங்கள் செயல்கள் அனைத்தையும் வழிபாடாகக் கருதுங்கள். கடமையே கடவுள். உழைப்பே வழிபாடு. எது நடந்தாலும், அதை இறைவனது செயல் மற்றும் அவனது கருணையின் ஒரு சின்னமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்- பாபா