azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

As a lump of sugar sweetens every drop of water in the cup, seeing through the eyes of love makes everyone friendly and charming. The simple milkmaids of Gokul saw each other as Krishna; such was their overwhelming love for the Divine Incarnation. The Bhagavata, where their love and the love of many other devotees of the Lord are described, is a text-book of Divine Love, Bhakti. Begin loving service, this day this moment. Each act will urge you to the next, for the thrill is so inspiring. The act of service is to be judged not by advertisement or the cost spent. The need of the recipient, the feeling (bhava) of the person who serves - these decide whether the act is gold or lead. Fill every act of yours with Love. Let no one suffer the slightest pain as a result of your thought, word or deed. Let this be your Sadhana. It will surely help you to achieve the Goal. (Divine Discourse, May 24, 1967)
PRACTISE THE VOCABULARY OF PURE AND UNSELFISH LOVE –
UNLEARN THE LANGUAGE OF HATE AND CONTEMPT. - BABA
எவ்வாறு ஒரு சர்க்கரைக் கட்டி, கோப்பையில் உள்ள நீரின் ஒவ்வொரு துளியையும் இனிமையானதாக ஆக்குகிறதோ, அவ்வாறே ப்ரேமை நிறைந்த கண்கள் மூலம் காண்பது ஒவ்வொருவரையும், நட்பு உடையவராகவும், அழகானவராகவும் ஆக்குகிறது. கோகுலத்தின் எளிமையான கோபிகைகள், ஒருவர் மற்றொருவரை ஸ்ரீகிருஷ்ணராகவே கண்டனர்; தெய்வீக அவதாரத்தின் மீது அவர்களுக்கு இருந்த அபரிமிதமான ப்ரேமை அப்படிப்பட்டதாகும். இறைவன் மீது அவர்களும், மற்ற பல பக்தர்களும் கொண்டிருந்த ப்ரேமையை விவரிக்கும் ஸ்ரீமத் பாகவதம், தெய்வீக ப்ரேமையான பக்தியின் ஒரு உரைநூலாகும். இன்றே, இப்போதே ப்ரேமை நிறைந்த சேவையைத் துவக்குங்கள். ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு உங்களைத் தூண்டும்; ஏனெனில், அதன் உற்சாகம் அவ்வளவு உத்வேகம் அளிக்க வல்லதாகும். சேவைப் பணியை, விளம்பரத்தைக் கொண்டோ அல்லது அதற்காகும் செலவைக் கொண்டோ கணிக்கக் கூடாது. பெறுபவரின் தேவை, சேவை ஆற்றுபவரின் உணர்வு- இவையே ஒரு செயல் பொன் போன்றதா அல்லது காரீயம் போன்றதா என முடிவு செய்யும். உங்களது ஒவ்வொரு செயலையும், ப்ரேமையால் நிரப்புங்கள். உங்களது சிந்தனை, சொல் மற்றும் செயலின் விளைவால், ஒருவர் சிறிதளவு துன்பத்தைக் கூட அடையாமல் இருக்கட்டும். இதுவே, உங்களது ஆன்மீக சாதனையாக இருக்கட்டும். அதுவே, நீங்கள் உங்களது குறிக்கோளை அடைய நிச்சயம் உதவும்.
பரிசுத்தமான மற்றும் தன்னலமற்ற ப்ரேமையின் சொற்களஞ்சியத்தைக் கடைப்பிடியுங்கள்; வெறுப்பு மற்றும் அவமதிப்பின் மொழியை நினைவிலிருந்து நீக்குங்கள். - பாபா