azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The prompting inside an individual to love one’s mother is an expression of the Divine Nature in that person. If there was no spark of the Divine in the person, they would not have loved at all. A person who loves another individual is a theist, whether they go to a temple or church, or not. You proceed from the known to the unknown. Then that love expands in ever widening circles, until it covers all nature! In its pure form, even plucking a leaf from a tree may affect you that you will think twice! The green vitality of the tree is a sign of the Divine Will, which sends its roots deep into the soil. The roots keep the tree safe from storms, holding it fast against the violent tug of the wind. So too, if the roots of love in an individual goes down into the spring of the Divine in them, no storm of suffering can shake them. (Divine Discourse, May 24, 1967)
LOVE WILL NEVER BEND BEFORE THE FORCES OF ENVY OR HATRED,
HOWEVER POWERFUL THEY MAY BE. - BABA
ஒருவர் தனது தாயை நேசிக்க வேண்டும் என்று உள்ளிருந்து வரும் தூண்டுதலே, அவருள் உள்ள தெய்வீக இயல்பின் ஒரு வெளிப்பாடாகும். அந்த மனிதருள் தெய்வீக ஒளிக்கீற்று இல்லை என்றால்,அவர்கள் எவரையுமே நேசித்திருக்க மாட்டார்கள். ஒரு கோலிலுக்கோ அல்லது சர்ச்சிற்கோ போனாலோ அல்லது போகா விட்டாலோ கூட, ஒரு மனிதன் , வேறு ஒருவரை நேசிக்கிறான் என்றால், அவனும் ஆஸ்திகனே.நீங்கள், அறிந்த ஒன்றிலிருந்து தான், அறியாத ஒன்றிற்குச் செல்கிறீர்கள்.பின்னர், இயற்கை அனைத்தையும் ஆட்கொள்ளும் அளவிற்கு அந்த ப்ரேமை, என்றும் விரியும் வட்டங்களாகப் பரவி விசாலமாகி விடுகிறது ! அதன் பரிசுத்தமான வடிவில், ஒரு மரத்திலிருந்து ஒரு இலையைப் பறிப்பது கூட, நீங்கள் ஒரு தடவைக்கு இரு முறையாக யோசிக்கும் அளவிற்கு, உங்களை பாதித்து விடுகிறது ! அதன் வேர்கள் பூமியில் ஆழமாகச் செல்லுமாறு செய்யும், ஒரு மரத்தின் பசுமையான உயிராற்றல்,தெய்வீக ஸங்கல்பத்தின் ஒரு சின்னமே. வேர்கள், காற்றின் உக்கிரமான இழுப்பிற்கு எதிராக மரத்தை உறுதியாக நிலை நிற்கச் செய்து, அதை புயல்களிலிருந்து காப்பாற்றுகின்றன. அதைப் போலவே, ஒரு மனிதனின் ப்ரேமை எனும் வேர்கள் அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகம் எனும் ஊற்று வரை செல்லுமானால், துன்பத்தின் எந்தப் புயலும் அவர்களை அசைக்க முடியாது.
அவை எவ்வளவு வலிமையானவையாக இருந்தாலும், பொறாமை அல்லது த்வேஷத்தின் சக்திகளுக்கு, ப்ரேமை ஒரு போதும் அடி பணியாது - பாபா