azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 22 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 22 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
You should be prepared to face the vicissitudes of life with firm faith in God. It is during times of difficulties that God is remembered. To confront difficulties with faith is itself a spiritual discipline. Although Rama was the son of the Emperor Dasaratha and son-in-law of King Janaka, he had to face many ordeals in life for the sake of upholding Dharma. The Pandavas went through many difficulties for the sake of adhering to righteousness and hence their name and fame remain forever. You should pray to the Lord to give you the strength to bear all troubles and face all difficulties. If you have even an atom of grace of the Lord, a mountain of troubles can be overcome. Chaitanya declared: "If a fraction of the time that is spent in worrying about wealth, provisions, wife, children, friends and business is devoted to contemplation on the feet of the Divine, one can face the messengers of death without fear and cross the Ocean of Samsara (worldly existence)!" (Divine Discourse, Apr 14, 1989)
MOST PEOPLE REMEMBER GOD ONLY DURING DIFFICULTIES. EARN THE GRACE OF THE
LORD AND MOUNTAINS OF TROUBLES WILL VANISH! - BABA
இறைவன் பால் கொண்டுள்ள திடமான நம்பிக்கையோடு, நீங்கள் வாழ்க்கையின் இடர்பாடுகளை எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். கஷ்ட காலங்களில் தான் இறைவன் நினைவிற்கு வருகிறான். கஷ்டங்களை, இறை நம்பிக்கையோடு எதிர்கொள்வதே கூட ஒரு ஆன்மீக சாதனையாகும். ஸ்ரீராமர், தசரத மஹாராஜனின் மகனாகவும், ஜனக மஹாராஜனின் மருமகனாகவும் இருந்தாலும் கூட, தர்மத்தை நிலை நாட்டுவதற்காக,அவர் பல இன்னல்களை வாழ்வில் எதிர் கொள்ள வேண்டி வந்தது. தர்மத்தைப் பற்றி ஒழுவதற்காக, பாண்டவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள்; அதனால் தான் அவர்களது பெயரும் , புகழும் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கிறது. அனைத்து துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்கும், எல்லாக் கஷ்டங்களை எதிர் கொள்வதற்கும் தேவையான சக்தியை அளிக்குமாறு, நீங்கள் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். உங்களுக்கு இறைவனது அருள் ஒரு அணு அளவு இருந்தாலும் கூட, ஒரு மலை அளவு கஷ்டங்களைக் கூட வெல்ல முடியும். ‘’செல்வம், பொருட்கள், மனைவி, மக்கள், நண்பர்கள் மற்றும் வியாபாரம் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில் செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பங்கை இறைவனது திருவடிகளை தியானிப்பதற்கு அர்ப்பணித்தால், ஒருவர், யமதூதர்களை அச்சமின்றி எதிர் கொண்டு, ஸம்ஸார சாகரத்தைக் கடந்து விட முடியும் ‘’ என்கிறார் சைதன்ய மஹாப்ரபு !
மனிதர்களில் பலர் கஷ்ட காலங்களில் மட்டுமே இறைவனை எண்ணுகிறார்கள். இறைவனது அருளைப் பெற்று விடுங்கள்; மலைகள் அளவு துன்பங்கள், மறைந்தே போய் விடும் !- பாபா