azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 19 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 19 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
In the Bible it is recorded that Jesus washed the feet of His disciples. When they asked him why He was doing so, Jesus answered: "I am washing your feet as your servant, so that you may learn to serve the world." Every individual, to begin with, is a messenger of God. When they fulfill their duties as a messenger, they realise that they are God’s own child and then achieve Union with God. God's love is boundless and universal, unlike human love, which is narrow and selfish. God promotes love in everyone through His love. Swami's love is beyond reason. It is unlimited and unchanging. Those of you who have been nourished by Divine love should not deprive yourself of its beneficence. I do not seek anything. I impose no hardships. If you understand the real nature of Swami's love, and utilise that love to transform yourself into an embodiment of love, you will become an example to the world! (Divine Discourse, Dec 25, 1984)
PRACTICE THE VOCABULARY OF PURE AND UNSELFISH LOVE –
UNLEARN THE LANGUAGE OF HATE AND CONTEMPT. - BABA
புனித பைபிளில், ஏசு பிரான், தனது சீடர்களின் பாதங்களைக் கழுவினார் என்று பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர்கள், அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டபோது, ஏசு பிரான், ‘’ நீங்கள் உலகிற்குச் சேவை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் உங்களது சேவகனைப் போல, உங்களது பாதங்களை நான் கழுவுகிறேன்’’ என்று சொன்னாராம். ஒவ்வொரு தனி மனிதனும், ஆரம்பத்தில், இறைவனின் ஒரு தூதனே. ஒரு இறை தூதனாக, அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்து முடிக்கும் போது, தாங்களும் இறைவனின் குழந்தைகளே என்பதை அவர்கள் உணர்ந்து, பின்னர், இறைவனுடன் ஒன்றரக் கலந்து விடுகிறார்கள். குறுகியதும், சுயநலமானதுமான மனித ப்ரேமையைப் போல அல்லாது, இறைவனது ப்ரேமை அளவற்றதும், பிரபஞ்சமயமானதும் ஆகும். இறைவன் தனது ப்ரேமையின் மூலம், ஒவ்வொருவரிடத்திலும் ப்ரேமையை வளர்க்கிறான். சுவாமியின் ப்ரேமை, காரணங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.அது அளவற்றதும்,மாறாததும் ஆகும். தெய்வீக ப்ரேமையினால் போஷிக்கப்பட்ட உங்களில் எவரும், அதன் பயனை இழந்து விடுமாறு நீங்களே செய்து கொள்ளக் கூடாது. நான் எதையும் வேண்டுவதில்லை. நான் எந்த விதமான கஷ்டங்களையும் திணிப்பதில்லை. சுவாமியின் ப்ரைமையின் உண்மையான இயல்பை நீங்கள் புரிந்து கொண்டு, உங்களையே ஒரு ப்ரேமையின் திருவுருவங்களாக மாற்றிக் கொள்ள நீங்கள் அந்த ப்ரேமையை பயன்படுத்திக் கொண்டால், நீங்கள் இந்த உலகிற்கே ஒரு உதாரணமாக ஆகி விடுவீர்கள் !
பரிசுத்தமான மற்றும் தன்னலமற்ற ப்ரேமையின் சொற்களஞ்சியத்தைக் கடைப்பிடியுங்கள்; வெறுப்பு மற்றும் அவமதிப்பின் மொழியை நினைவிலிருந்து நீக்குங்கள். - பாபா